
தஞ்சை மாவட்டம் ஓ.பி.எஸ்க்கு தான் ஆதரவு என வைத்திலிங்கம் சொல்லி வந்த நிலையில், தற்போது அவரது வலதுகரமே எடப்பாடி பக்கம் சாய்ந்துள்ளது, அவருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது நால்வர் அணியில் ஒருவராக செயல்பட்டவர் ஒரத்தநாட்டை சேர்ந்த வைத்திலிங்கம். கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் அவர் தோற்றபோது வைத்திலிங்கத்தை அழைத்த ஜெயலலிதா, அவருக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி தந்து ஆறுதல் கூறினார். அந்தளவிற்கு ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக வலம் வந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களின் அதிமுக நிர்வாகத்தை பார்த்து வந்தார். இந்த முறை நடந்த சட்டமன்ற தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் வைத்திலிங்கம் வெற்றி பெற்றார். தொடர்ந்து அதிமுக துணை ஒருங்கிணைப்பாளராகவும், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.
இதையும் படிங்க;- எடுத்த முயற்சி எல்லாம் தோல்வி... ஓபிஎஸ்ஸின் இந்த கோரிக்கையும் நிராகரிப்பு.. பொதுச்செயலாகிறார் இபிஎஸ்?
இந்நிலையில், அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் மோதல் உச்சம் பெற்றுள்ளது. ஒற்றை தலைமை வேண்டும் என எடப்பாடி அணியும், இரட்டை தலைமையே நீடிக்க வேண்டும் என ஓபிஎஸ் அணியும் பகிரங்கமாக களத்தில் இறங்கியுள்ளன. இதில் ஆரம்பம் முதலே ஓபிஎஸ் அணிக்கு வைத்தியலிங்கம் ஆதரவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு வலுத்து வருகிறது. ஏற்கனவே நாகை, திருவாரூர் மாவட்டங்களில் எடப்பாடிக்கு அந்தந்த மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதில், தஞ்சை மாவட்டம் ஓ.பி.எஸ்க்கு தான் ஆதரவு என வைத்திலிங்கம் சொல்லி வந்த நிலையில், தற்போது அவரது வலதுகரமே எடப்பாடி பக்கம் சாய்ந்துள்ளது, அவருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆவின் பால்வளதலைவரான காந்தி கடந்தமுறை நடந்த சட்டமன்ற தேர்தலில் தஞ்சை தொகுதிக்கு வைத்திலிங்கம் மூலம் சீட்டு வாங்கி நின்றார். ஆனால், உள்குத்தால் தோற்ற அவர், தொடர்ந்து வைத்திலிங்கத்தின் உண்மை விசுவாசி பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வந்தார். இந்நிலையில், காந்தி, முன்னாள் அமைச்சரான திருவாரூர் காமராஜ் முன்னிலையில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இது வைத்திலிங்கத்திற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டுமின்றி முன்னாள் எம்.பி. பாரதி மோகன், திருவையாறு முன்னாள் எம்.எல்.ஏ. ரெத்தினசாமி, பட்டுக் கோட்டை முன்னாள் எம்எல்ஏ சேகர், பேராவூரணி முன்னாள் எம்எல்ஏ கோவிந்தராஜ் உள்ளிட்டோர் எடப்பாடி பக்கம் சாய்ந்தனர். மொத்தத்தில் வைத்தியலிங்கத்தின் கூடாராம் டெல்டாவில் காலியாகிவிட்டதாகவே கூறப்படுகிறது.
இதையும் படிங்க;- "முனுசாமியை பார்த்து கேட்கிறேன் சத்தியமாக சொல்லுங்கள் நீங்கள் உத்தமரா.."சந்தர்ப்பவாதி யார்?விளாசும் OPS குரூப்