’அது நடந்தாகணும்...’ எடப்பாடி- தமிழிசை ரகசிய சந்திப்பு!

By vinoth kumarFirst Published Dec 18, 2018, 3:04 PM IST
Highlights

அதிமுக, திமுக ஆகிய இருகட்சிகளும் அமமுகவை பிய்த்து பிரிந்து மேய திட்டமிட்டிருக்கும் நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ரகசியமாக சேலத்தில் சந்தித்து பேசியிருக்கிறார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.    

அதிமுக, திமுக ஆகிய இருகட்சிகளும் அமமுகவை பிய்த்து பிரிந்து மேய திட்டமிட்டிருக்கும் நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ரகசியமாக சேலத்தில் சந்தித்து பேசியிருக்கிறார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.    

கடந்த 15ம் தேதி சேலம் மாவட்டத்தில் முகாமிட்டு இருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில், அதே நாளன்று சேலத்திற்கு பிரதமரின் காணொலி காட்சி, கட்சி நிகழ்ச்சிக்காக பாஜ மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்றிருந்தார். நாமக்கல்லில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மீண்டும் சேலம் திரும்பினார். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வண்டியை விடச்சொல்லி இருக்கிறார் தமிழிசை. அங்கு சென்ற அவர் முதல்வரிடம் அரை மணி நேரத்திற்கும் மேலாக பேசியுள்ளார்.

அப்போது, ‘’மக்களவை தேர்தல் நெருங்குகிறது. இந்த நேரத்தில் நீங்கள் ஒரு அணியாகவும், தினகரன் ஒரு அணியாக பிரிந்திருப்பது நமக்குத்தான் பாதகம். எனவே இரு அணி நிர்வாகிகளையும் ஒன்றிணைக்க வேண்டும். கட்டாயம் அது நடந்தே ஆக வேண்டும். தேர்தலில் கூட்டணி அமைக்க மேலிடம் உத்தரவிட்டுள்ளது. திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தேர்தலுக்கு முழுவீச்சில் தயாராகி வருவதால், விரைந்து செயல்படுமாறு பாஜ மேலிடம் விரும்புகிறது’ என டெல்லி தலைமை சொன்னதை எடப்பாடி காதில் போட்டுச் சென்றுள்ளார்.

ஆனால், எடப்பாடி பழனிசாமி எந்த விதமான உறுதியான பதிலையும் கூறவில்லை என்கிறார்கள். இருவரது ரகசிய சந்திப்பை இது சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பரபரப்பாக பகிர்ந்து வருகிறார்கள். 

click me!