எனக்கென்று பர்ஷனல் கிடையாதா? பி.ஜே.பி. கொடுத்த ஃபைலை பார்த்து கொந்தளித்த முதல்வர் எடப்பாடி!

By vinoth kumarFirst Published Dec 18, 2018, 2:58 PM IST
Highlights

அ.தி.மு.க. மீதான பி.ஜே.பி.யின் எரிச்சலின் வெளிப்பாடுதான், குட்கா ஊழல் விவகாரத்தில் சி.பி.ஐ.யின் விசாரணைப் பிடி திடீரென இறுக துவங்கியது! என்கிறார்கள். முக்கிய அமைச்சரான சுகாதாரத்துறை மினிஸ்டர் விஜயபாஸ்கரை இந்த விவகாரத்தில் மிக அதிகமாக எக்ஸ்போஸ் செய்திருக்கிறது டெல்லி லாபி ஒன்று. இதன் மூலம் ஒட்டுமொத்தமாகவே அ.தி.மு.க.வின் அதிகார மையம் நடுங்கிக் கிடக்கிறது. 

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களில் அதிரடியாய் ஆப்பு வாங்கிக் கட்டியிருக்கிறது பி.ஜே.பி. இதை எதிர்கட்சிகள் கொண்டாடியதைக் கூட அக்கட்சி தாங்கிக் கொண்டது. ஆனால், தமிழகத்தின் ஆளுங்கட்சியும், தன் கைப்பிள்ளை போன்ற நண்பனுமான அ.தி.மு.க.வின் சீனியர் அமைச்சர்களே உரசிப் பேசியதைத்தான் பி.ஜே.பி.யால்  ஜீரணிக்க முடியவில்லை.

அ.தி.மு.க. மீதான பி.ஜே.பி.யின் எரிச்சலின் வெளிப்பாடுதான், குட்கா ஊழல் விவகாரத்தில் சி.பி.ஐ.யின் விசாரணைப் பிடி திடீரென இறுக துவங்கியது! என்கிறார்கள். முக்கிய அமைச்சரான சுகாதாரத்துறை மினிஸ்டர் விஜயபாஸ்கரை இந்த விவகாரத்தில் மிக அதிகமாக எக்ஸ்போஸ் செய்திருக்கிறது டெல்லி லாபி ஒன்று. இதன் மூலம் ஒட்டுமொத்தமாகவே அ.தி.மு.க.வின் அதிகார மையம் நடுங்கிக் கிடக்கிறது. 

இந்த நிலையில் அ.தி.மு.க.வின் தலைமைப்பீடம் மேலும் பெரிதாய் நடுங்கும் விதமாக சம்பவம் ஒன்று அரங்கேறியிருக்கிறது. அது, ‘நாங்கள் போட்டியிட முடிவெடுத்திருக்கும் தொகுதிகள்.’ என்று சுமார் பனிரெண்டு முதல் பதினைந்து தொகுதிகள் அடங்கிய  லிஸ்ட் ஒன்றை எடப்பாடியாரின் கைகளுக்கு  அனுப்பியிருக்கிறதாம் பி.ஜே.பி. தலைமை. இதைப் பார்த்தவருக்கு டபுள் ஷாக். ஒன்று, டபுள் டிஜிட்டில், இப்படி பதினைந்து வரை தொகுதிகளை கேட்கிறார்களே! என்பது. மற்றொன்று, ஜெயலலிதாவுக்குப் பின் அ.தி.மு.க.வில் நிலவும் ரகளையையெல்லாம் தாண்டி அக்கட்சி மிக அழகாக பெயர் எடுத்து வைத்திருக்கும் தொகுதிகள் சிலவற்றை குறிவைத்து கேட்டிருக்கிறதாம் பி.ஜே.பி. இதை எடப்பாடியாரால் ஜீரணிக்கவே முடியவில்லையாம். 

பல முனை அதிருப்திகளால் வரும் தேர்தல்களில் அ.தி.மு.க.வுக்கான வெற்றி வாய்ப்பு மிக மோசம்! என்று தொடர்ந்து சில சர்வேக்கள் சொல்லி வருகின்றன. அவற்றை நம்பாமல் முதல்வரே எடுத்த உளவுத்துறை போலீஸின் சர்வேயும் அதையே சொல்கிறது. இதனால் ’முடிந்தளவு நிறைய தொகுதிகளில் போட்டியிடுவோம், கடுமையாய் செலவு செய்வோம், கடுமையாய் உழைப்போம். எது எது ஜெயிக்கிறதோ அதெல்லாம் லாபமே!’ என்று பன்னீர் உள்ளிட்டவர்களிடம் சொல்லி ஒரு திட்டத்தை தீட்டி வைத்திருந்தார் பழனிசாமி. 

இந்நிலையில் முள்ளங்கி பத்தை போல் முப்பத்தொன்பது தொகுதிகளில் பதினைந்து வரை பறிக்க பி.ஜே.பி. திட்டம் போடுவது அவரை கலங்கடித்திருக்கிறது. பதினைந்து நாடாளுமன்ற தொகுதிகளில் தாங்கள் நிற்கப்போவதில்லை என்பதை சொன்னால், அவை அடங்கும் கிட்டத்தட்ட தொண்ணூறு சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த தங்கள் கட்சிக்காரர்கள் எப்படி ரியாக்ட் செய்வார்கள்? என்பதை நினைத்தாலே முதல்வருக்கு மூச்சு முட்டுகிறதாம். 

இது போதாதென்று, உளவுத்துறையின் சர்வேயில் ‘அரசியல் தாண்டி எங்களுக்கு பிடிச்ச மனிதர் எங்க எம்.பி.’ என்று அ.தி.மு.க. எம்.பி.க்கள் பெயர் எடுத்து வைத்திருக்கும் சொற்ப தொகுதிகள் அத்தனையையும் அந்த லிஸ்டினுள் பி.ஜே.பி. சேர்த்திருப்பதுதான் அவரை மேலும் அதிர்ச்சுக்கு உள்ளாக்கி இருக்கிறது. தனக்கு தன் உளவுத்துறை சொன்ன லிஸ்டை எப்படி டெல்லி லாபி ஸ்மெல் செய்தது? அந்த ரிப்போர்ட்டை அப்படியே அலுங்காமல் வாங்கி அலசியிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. 

அப்படியானால் எதுவுமே ரகசியம் இல்லையா? ஒரு முதல்வராகவும், கழக துணை ஒருங்கிணைப்பாளராகவும் என்னுடைய ஒவ்வொரு அசைவையுமே அவர்கள் ரெக்கார்டு செய்கிறார்களா? இது சர்வாதிகாரமில்லையா! என்று தன் நெருங்கிய சகாக்களிடம் குமுறிவிட்டாராம் முதல்வர். பன்னீரால் சொல்லவும் முடியவில்லை, ஜீரணிக்கவும் முடியவில்லை. கழக ஒருங்கிணைப்பாளர் எனும் முறையில் பனிரெண்டு முதல் பதினைந்து தொகுதிகளை அள்ளிக் கொடுத்தால் கட்சிக்காரர்கள் தன்னை எந்தளவுக்கு கரித்துக் கொட்டுவார்கள் என்பதை அவரால் கற்பனை செய்தும் பார்க்க முடியவில்லை!. ஆக நாடாளுமன்ற தேர்தலை நோக்கி இனி வரும் நாட்கள் அ.தி.மு.க.வுக்கு மிக கடினமாகவே இருக்கும் என்று புரிகிறது!

click me!