ஜெயலலிதாவை இயக்கிய சசிகலாவின் கரங்கள் காளான் வளர்க்குது...! பரப்பன பரிதாபங்கள் @ சின்னம்மா.காம்.

By vinoth kumarFirst Published Dec 18, 2018, 1:55 PM IST
Highlights

பேப்பர் வாசிக்கவும், டி.வி. பார்க்கவும் சசிக்கு வசதி தரப்பட்டுள்ளது. எனவே தமிழக மற்றும் தேசிய அரசியலை அப்டேட் செய்து கொண்டே இருக்கிறார் நிமிடத்துக்கு நிமிடம்

எம்.எல்.ஏ.வெல்லாம் கிடையாது ஸ்ட்ரெய்ட்டா சி.எம்.தான்! என்று கன்னாபின்னா கணக்கு போட்ட சசிகலாவை பக்குவமாக பேக் பண்ணி பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தது சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு தீர்ப்பு. ‘போயஸ் பேலஸிலும், கோடநாடு எஸ்டேட் பங்களாவிலும் வளைய வந்த சின்னம்மா, சிறையில் படும் இன்னல்கள்! அய்யகோ!’ என்று அவரது ஆதரவு நிர்வாகிகள் சிலர் சீன்ஸ் போட்டுக் கொண்டிருந்தனர். 

ஆனால் சிறைத்துறை டி.ஐ.ஜி.யான  ரூபா எனும் பெண்சிங்கம், அக்ரஹாரா சிறையில் சசிகலா ஆனந்த வாழ்க்கை வாழ்வதை வீடியோ மற்றும் போட்டோ ஆதாரங்களுடன் போட்டுப் பொளந்தார். விளைவு, சசிகலாவுக்கு வழங்கப்பட்டு வந்த பைபாஸ் வசதிகள் பணால் ஆகின. இந்நிலையில் கடந்த வாரத்தில் இரண்டு நாட்கள் சென்னை வருமான வரித்துறை அதிகாரிகள் பரப்பன சிறையில் சசிகலாவை என்கொயரி செய்துவிட்டு திரும்பின. இதன் பிறகு சிறையில் சசி பற்றிய தகவல்கள் மீண்டும் றெக்கை கட்டி பறக்கின்றன. 

அக்ரஹாரா சிறையில்  அப்படி என்னதான் பண்ணுகிறார் சசி?...

* பேப்பர் வாசிக்கவும், டி.வி. பார்க்கவும் சசிக்கு வசதி தரப்பட்டுள்ளது. எனவே தமிழக மற்றும் தேசிய அரசியலை அப்டேட் செய்து கொண்டே இருக்கிறார் நிமிடத்துக்கு நிமிடம். 

* சசியை, சிறையின் விதிகள் அனுமதிக்கும் அளவுகளை கொஞ்சம் தாண்டி பார்வையாளர்கள் வந்து செல்ல அனுமதிக்கின்றனர். எனவே அ.ம.மு.க. சார்பாக அடிக்கடி முக்கியஸ்தர்கள் கண்டு பேசி வருகிறார்கள். (அ.தி.மு.க. சார்பாகவும் இரண்டு பேர் மாதம் இரண்டு முறையாவது ‘தினகரன் ஆதரவாளர்’ எனும் போர்வையில் உள்ளே போய் வருவது தனி ஸ்டோரி.)

* சசிகலா சிறையில் பிற கைதிகள் செய்வது போல் வேலைகள் செய்வதில்லை. மாறாக படிப்பில் ஆர்வம் காட்டுகிறார். கம்ப்யூட்டர் சயின்ஸில் அடிப்படை கல்வியை படித்து வைத்திருக்கிறார். தான் கற்று வைத்தது தொடர்பாக சில சின்னச்சின்ன தேர்வுகளையும் அவ்வப்போது அட்டெண்ட் செய்கிறார். 

* சிறைக்கைதிகள் படிக்க விரும்பினால் பெங்களூரு பல்கலையில் இணைந்து ஏதாவது கோர்ஸ் படிக்கும் வசதி உள்ளது. இதற்கு அரசே செலவு செய்கிறது. அந்த வகையில் சசிகலா கன்னட மொழியில் அடிப்படை சர்டிஃபிகேட் கோர்ஸ் ஒன்றில் சேர்ந்து படிக்கிறார். தனியாக படித்தால் போரிங்காக இருக்கும், ரெண்டு பேராக சேர்ந்து படிக்கலாமே என்று இளவரசியும் இதே கோர்ஸை படிக்கிறார்.

* இது போக ஓய்வு நேரங்களில் காளான் வளர்க்கிறாராம் சசிகலா. தாம் தூம் தய்ய தக்க! என்று அதிகாரம் பண்ணாமல் இப்போதெல்லாம் சசி மிக கூல் லேடியாக ஆகிவிட்டதாக சிறை வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த தேசத்தின் இரும்பு மனுஷி! என்று அத்தனை மாநில அரசியல்வாதிகளாலும்  வியக்கப்பட்ட ஜெயலலிதாவை முப்பது வருடங்களாக இயக்கிய, ஆட்டுவித்த, தாங்கிய, கட்டுப்பாடு விதித்த, கருணையாய் கவனித்த சசிகலாவின் கரங்கள் இப்போது சாதாரண காளானை வளர்ப்பதை பார்க்கும்போது பரப்பன சிறை அதிகாரிகளுக்கே பரிதாபமாய் இருக்கிறது. விதி வலிது சார்!

click me!