அண்ணன் உயிரை காப்பாற்ற போராடினேன்... ஆனால் கொன்றுவிட்டார்கள்!! மொத்த கூட்டத்தையும் அழ வைத்த அன்புமணி!

By sathish kFirst Published Dec 18, 2018, 1:41 PM IST
Highlights

பாட்டாளி மக்கள் கட்சியின் இரும்புத் தூணாய் இருந்தவர் வன்னியர் சங்க தலைவராக இருந்த காடுவெட்டி குரு. ராமதாஸுக்கும், அவரது மகனுக்கும் கட்டுப்படாத பா.ம.க. இளைஞர் படை, குருவின் ஒரு பார்வைக்கே கட்டுப்பட்டு நிற்கும் கப்சிப்பென்று. அப்பேர்ப்பட்ட குரு சில மாதங்களுக்கு முன் இறந்துவிட்டார். 

குரு இறந்த பின் பா.ம.க.விலும், வன்னியர் சங்கத்திலும், குருவின் குடும்பத்திலும் ஏகப்பட்ட குழப்பங்கள். அது நேரடியாக ராமதாஸின் குடும்பத்தை பாதிக்கிறது. குறிப்பாக, குருவின் இறப்புக்கு காரணமே மருத்துவர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணியின் அலட்சிய போக்கே! என்று  குருவின் சகோதரி குற்றம் சாட்டிய விவகாரம் ராமதாஸை ரகளைக்கு உள்ளாக்கிவிட்டது. 

ஏற்கனவே வன்னியர் வாக்குகளை குறிவைத்து வளைத்து வரும் எடப்பாடி பழனிசாமி, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அட்ரா சக்கை அரசியல் செய்ய ஆரம்பித்தார். குருவின் ஆதரவாளர்களும், வன்னியர் சங்க முக்கியஸ்தர்கள் சிலரும் சேர்ந்து பா.ம.க.வை உடைத்து பிரிக்கப்போகின்றனர்! என்கிற அளவுக்கு தகவல்கள் வைரலாகின. இதில் சீனியர், ஜூனியர் டாக்டர்கள் இருவருமே மிரண்டு இருக்கின்றனர். 

இந்நிலையில் காடுவெட்டி கிராமத்தில் நடந்த விழாவில் மைக் பிடித்த அன்புமணி ராமதாஸ்...”மாவீரனுக்கு (குரு) வந்த நோயை குணப்படுத்த வேண்டுமென்றால் உறுப்புமாற்ரு சிகிச்சைதான் ஒரே வழி. அதற்கு முயற்சி எடுத்தோம், ஆனால் அவர் ஒத்துழைக்கவில்லை. இந்த சிகிச்சை செய்தால் உடம்பு அப்படியாகிவிடும், இப்படியாகிவிடுமென்று அவரோடு இருந்த சிலர் பொய் பயங்காட்டி அமுக்கிவிட்டனர். மாவீரனை எப்படியாவது குணமடைய வைக்க நானும், மருத்துவ அய்யாவும் பெரும் முயற்சிகளை எடுத்தோம்.

சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்ல நினைத்தோம். ஆனால் குருவிடம் பாஸ்போர்ட் இல்லை. கஷ்டப்பட்டு பாஸ்போர்ட் வாங்கிவிட்டு அவரை அழைத்துச் செல்ல  நினைத்தபோது அவரோ ‘பொங்கல் முடியட்டும்! தீபாவளி முடியட்டும்’ என்று தள்ளிப்போட்டுவிட்டார். நாங்கள் சொன்ன சிகிச்சைகளை செய்திருந்தால் குறைந்தது இன்னும் ஐந்து வருடங்களாவது நம்மோடு இருந்திருப்பார் மாவீரன்.” என்று ஆதங்கப்பட்டவர், 

”மாவீரனின் மகள் விருத்தாம்பாளுக்கு கோடீஸ்வர குடும்பத்தில் திருமணம் முடித்து வைக்க நினைத்தோம்! அவரது மகன் கனல் அரசனை மாவீரனின் ஆசைப்படியே டாக்டருக்கு படிக்க வைக்க நினைக்கிறோம். ஆனால் குழந்தை போன்ற கனலை சில விஷமிகள் திசைதிருப்புகிறார்கள். உண்மையை அவனிடமிருந்து மறைக்கிறார்கள்.” என்று கண்கலங்கியவர் பின்...
“சிலர் போடும் எலும்புத் துண்டுகளுக்காக ஒரு கும்பல் மாவீரன் வீட்டை சுற்றுக் சுற்றி வந்துகொண்டிருக்கிறது. இது அவர்களின் புத்தி அவ்வளவுதான். இதற்கெல்லாம் காலம் பதில் சொல்லும். ஆனால் இப்போது நடக்கும் சம்பவங்களுக்கும் அரசியலுக்கும் எந்த தொடர்புமில்லை. இது தனிப்பட்ட குடும்ப பிரச்னை.” என்று ஆவேசப்பட்டிருக்கிறார். 

அன்புமணியின் இந்த நவரச எமோஷன்களைக் கண்டு பக்கதில் அமர்ந்திருந்த டாக்டரே சில நிமிடங்கள் ஆடியும், அதிர்ந்தும் போய்விட்டாராம். 
’சிலர் போடும் எலும்புத்துண்டுகளுக்காக ஒரு கும்பல்’...என்று அன்புமணி போட்டுத் தாக்கியது, சில சலுகைகளை அள்ளிவீசி வன்னியர் வாக்கு வங்கியின் ஒரு பகுதியை தன் பக்கம் ஈர்க்க நினைக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும், அவருக்கு நன்றியாக நடக்கும் சில வன்னிய முக்கியஸ்தர்களையும்தான் என்று வட தமிழ்நாடு முழுக்க ஒரே பரபரப்பு. 

இதற்கு பதிலடியாக அந்த தரப்பு அன்புமணியை எந்தளவுக்கு விமர்சித்து பேசி, துவைத்து தொங்கவிடப்போகிறதோ!

click me!