உங்க ஆட்சிக்காலத்தில் எத்தனை வெள்ளை அறிக்கை வெளியிட்டீங்க ! ஸ்டாலினை தாறுமாறா தெறிக்கவிட்ட இபிஎஸ் !!

By Selvanayagam PFirst Published Sep 11, 2019, 9:42 PM IST
Highlights

திமுக ஆட்சி காலத்தில்  எத்தனை தொழில் தொடங்கப்பட்டது ? முதலீடுகள் எவ்வளவு ஈர்க்கப்பட்டது என்பது குறித்து நீங்கள் எத்தனை வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளீர்கள் என்று மு.க.ஸ்டாலினுக்கு  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்..
 

திமுக ஆட்சியில் 2006 முதல் 2010 மார்ச் வரை மட்டும் 46 ஆயிரத்து 91 கோடி ரூபாய் அந்நிய முதலீடுகள் பெறப்பட்டு 2 லட்சத்து 21 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் இதுவரை போடப்பட்டுள்ள 443 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி எத்தனைக் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் பெறப்பட்டுள்ளன. 

அந்த முதலீடுகள் மூலம் தொடங்கப்பட்டு, செயல்படும் தொழில் நிறுவனங்கள் எத்தனை? அந்நிறுவனங்கள் மூலம் எத்தனை ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட்டன என்பதையெல்லாம் குறித்து விரிவான வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா?" என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். 

இதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் 40 ஆண்டுகளாக எந்த முதலமைச்சரும் வெளிநாடு பயணம் மேற்கொள்ளவில்லை. எதிர்க்கட்சித்தலைவர்  மு.க.ஸ்டாலின் குறை கூறுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார். தமிழக அரசை பாராட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மனமில்லை.  

அதிமுக ஆட்சியை விமர்சிக்க திமுகவுக்கு தகுதியில்லை.  யாரோ ஒருவர் எழுதி கொடுப்பதை பேசும் ஸ்டாலினுக்கு இதுபற்றி தெரிய வாய்ப்பில்லை. திமுக ஆட்சியில் தொழில் முதலீடு ரூ.26 ஆயிரம் கோடி தான்.  அதிமுக ஆட்சியில் ரூ.53 ஆயிரம் கோடி முதலீடுகள் பெறப்பட்டுள்ளனரூ.2 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சி காலத்தில் எத்தனை வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது? எவ்வளவு முதலீடுகள் பெறப்பட்டுள்ளன? என முதலமைச்சர் பழனிசாமி கேள்வி எழுப்பினார்.  

click me!