கனிமொழிக்கு நாடாளுமன்ற துணை சபாநாயகர் பதவி ரெடி ! முட்டுக்கட்டை போடும் ஸ்டாலின் !!

Published : Sep 11, 2019, 09:16 PM IST
கனிமொழிக்கு நாடாளுமன்ற துணை சபாநாயகர் பதவி ரெடி ! முட்டுக்கட்டை போடும் ஸ்டாலின் !!

சுருக்கம்

நாடாளுமன்ற துணை சபாநாயகராக கனிமொழியை நியமிக்க பாஜக அரசு தயாராக உள்ள நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதற்கு முட்டுக்கட்டை போடுவதாக தெரிகிறது.

மத்தியில் மோடி ஆட்சி அமைந்து 100 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இதுவரை துணை சபாநாயகர் நியமிக்கப்படவில்லை. பொதுவாக எண்ணிக்கை அடிப்படையில் துணை சபாநாயகர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு கூட கிடைக்காத நிலைதான் உள்ளது.

இந்நிலையில் பாஜக நினைத்தால் துணை சபாநாயகர் பதவியை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். அந்தவகையில்  நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்ற முறையில் அந்தப் பதவியை  கனிமொழிக்கு கொடுக்கலாம் என பாஜக நினைக்கிறது.

ஆனால் திமுக தலைமை இதுவரை எந்தவித முடியும் எடுக்க முடியாம்ல் மௌனம் காக்கிறது. மு.க.ஸ்டாலின் இது குறித்து எதுவும் கூறாமல் இருக்கிறார்.. அதே நேரத்தில் துணை சபாநாயகர் பதவியை ஏற்றுக்கொள்ள கனிமொழிக்கும் விருப்பம் இருந்தாலும் அண்ணனின் பதிலுக்காக காத்திருக்கிறார்.

எற்கனவே நாடாளுமன்ற குழுத் தலைவர் பதவியை கனிமொழி கோட்டைவிட்ட நிலையில், இதையவது பிடிக்கலாம் என நினைப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

‘மரியாதைக்குரிய டிடிவி தினகரன்’ டிடிவியை அன்போடு வரவேற்ற இபிஎஸ்..! அனல் பறக்கும் தமிழக அரசியல்
இபிஎஸ்க்கும், எனக்கும் வெறும் பங்காளி சண்டை தான்..! மீண்டும் அதிமுக கூட்டணியில் அமமுக.. டிடிவி பளீர்..