நான் ஊர்ந்து வந்தது இருக்கட்டும்.. உங்க அப்பா ரயிலேறி வந்து முதல்வரான கதை தெரியுமா? முதல்வர் கடும் தாக்கு..!

By vinoth kumarFirst Published Jan 20, 2021, 6:56 PM IST
Highlights

துண்டு சீட்டு இல்லாமல் ஸ்டாலின் விவாதத்துக்கு வரத் தயாரா என முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் சவால் விடுத்துள்ளார். 

துண்டு சீட்டு இல்லாமல் ஸ்டாலின் விவாதத்துக்கு வரத் தயாரா என முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் சவால் விடுத்துள்ளார். 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே நடந்த தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் பழனிசாமி பேசுகையில்;- முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவை உடைக்கவும், ஆட்சியை கவிழ்க்கவும் ஸ்டாலின் எவ்வளவோ முயற்சி செய்தார். ஆனால், மக்கள் மற்றும் தொண்டர்களின் ஆதரவோடும் அனைத்து சதித்திட்டங்களும் முறியடிக்கப்பட்டன. தற்போது கூட வரும் 27ம் தேதிக்கு பின், பழனிசாமி முதல்வராக இருப்பாரா எனககூறி வரும் ஸ்டாலின், ஏற்கனவே, இந்தஆட்சி ஒரு மாதத்தில் கவிழும், ஆறு மாதத்தில் கவிழும், ஒரு வருடத்தில் கவிழும் எனக் கூறி வந்தார். ஆனால், நான்கு ஆண்டுகளாக சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது. வரும் சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுக தான் வெற்றி பெறும்.

ஸ்டாலின் தான் முதல்வர் கனவில் உள்ளார். அவரது கனவு ஒரு போதும் நிறைவேறாது. மீண்டும் அதிமுக ஆட்சிதான் தமிழகத்தில் மலரும். திமுக ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் மின்தடை தான் ஏற்படும். கடந்த திமுக ஆட்சியில் பல மணி நேரங்கள் இருந்த மின்தடை, அதிமுக அரசு பொறுப்பேற்றவுடன் தற்போது மின்மிகை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. நான் எப்பொழுதும் விவசாயி விவசாயி என்று சொல்லுகிறேன் என ஸ்டாலின் சொல்லி வருகிறார். விவசாயி, விவசாயி என்று தான் சொல்ல முடியும். வியாபாரி தான் வியாபாரி என்று தான் சொல்ல முடியும் , அதேபோல விவசாயி தான் விவசாயி என்று தான் சொல்ல முடியும்.

நாட்டை பற்றியே தெரியாத தலைவர் ஸ்டாலின். என்னுடன் விவாதிக்க ஸ்டாலின் தயாராக உள்ளாரா? துண்டு சீட்டு இல்லாமல் ஸ்டாலின் விவாதத்திற்கு தயாரா? என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். தான் ஊர்ந்து வந்து முதலமைச்சர் ஆனேன் என ஸ்டாலின் கிண்டல் செய்கிறார். ஆனால், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எந்த எக்ஸ்பிரசில் எப்படி வந்தார். எப்படி முதலமைச்சரானார் என்று மக்களுக்கு தெரியும் என்றும் கூறினார். 

click me!