எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆப்பு... உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு..!

By vinoth kumarFirst Published May 3, 2019, 11:14 AM IST
Highlights

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி அமர்வில் திமுக சார்பில் முறையீடு செய்யப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் இந்த வழக்கை திங்கள்கிழமை விசாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. 

அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்னசபாபதி, விருத்தாச்சலம் கலைச்செல்வன் ஆகியோர் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது விவகாரம் தொடர்பாக அமைச்சர் சி.வி.சண்முகம், கொறடா ராஜேந்திரன், சபாநாயகர் தனபால் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். பின்னர் 3 எம்.எல்.ஏ.க்கள் மீது அதிமுக கொறடா ராஜேந்திரன் நடவடிக்கை எடுக்க வேண்டும் சபாசாயகருக்கு பரிந்துரை செய்தார்.

இதனையடுத்து 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் தனபால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதனிடையே சபாநாயகர் தனபாலுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளார். 

இந்நிலையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர மனு கொடுக்கப்பட்டுள்ளதால், நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரி திமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கை அவசர வழக்காக வரும் திங்களன்று விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் உறுதியளித்துள்ளது.

click me!