ஒரு கையில் பேரன்... மறு கையில் ஓட்டு.. அனைவரும் ஜனநாயக கடமையாற்ற முதல்வர் பழனிசாமி அறிவுரை..!

By vinoth kumarFirst Published Apr 6, 2021, 12:27 PM IST
Highlights

சேலம் எடப்பாடியை அடுத்த சிலுவம்பாளையத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் முதல்வர் பழனிசாமி தனது குடும்பத்துடன் வாக்களித்தார்.

சேலம் எடப்பாடியை அடுத்த சிலுவம்பாளையத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் முதல்வர் பழனிசாமி தனது குடும்பத்துடன் வாக்களித்தார்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஒரே கட்டமாக இன்று நடக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலையிலேயே தனது வாக்கை திமுக தலைவர் ஸ்டாலின் பதிவு செய்தார். இந்நிலையில் முதல்வர் பழனிசாமி காலை சுமார் 10.30 மணி அளவில் தனது வீட்டருகில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

வாக்களிக்க கிளம்பும் முன் தனது வீட்டில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் தனது தாயார் படத்திற்கு மலர் தூவி வணங்கினார். பின்னர் தனது மனைவி, மகன், மருமகள் பேரனுடன் வீட்டிலிருந்து நடந்தே சிலுவம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளிக்குச் சென்றார். இதனையடுத்து, வரிசையில் நின்று பேரனை ஓட்டுப்போடும் இடம் வரை அழைத்துச் சென்று தனது வாக்கை பதிவு செய்தார்.

வாக்களித்தபின் தனது பேரனைத் தூக்கிக் கொண்டு பத்திரிகையாளர்களுக்கு போஸ் கொடுத்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- வாக்காளர்கள் அனைவரும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்று கூறினார்.

click me!