ஆட்சியை காப்பாற்றி கொடு ஆண்டவா - கோவில் கோவிலாக சுற்றும் எடப்பாடி...! தற்போது திருப்பதியில்...!! 

 
Published : Oct 02, 2017, 06:18 PM ISTUpdated : Sep 19, 2018, 01:15 AM IST
ஆட்சியை காப்பாற்றி கொடு ஆண்டவா - கோவில் கோவிலாக சுற்றும் எடப்பாடி...! தற்போது திருப்பதியில்...!! 

சுருக்கம்

edappadi palanisamy in tirupathy

முதல்வர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றுள்ளார். நாளை காலை நடைபெறும் சிறப்பு ஆராதனை சேவையில் முதல்வர் பங்கேற்கிறார். 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மை இழந்து விட்டதாகவும், அவரை பெரும்பான்மையை நிரூபிக்க கோரி உத்தரவிட வேண்டும் எனவும் எதிர்கட்சி தரப்பிலும் டிடிவி தரப்பிலும் நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு குறித்த தீர்ப்பு நாளை மறுநாள் வெளியாக உள்ளது. இதனால் தமிழக முதலமைச்சர் கோவில் கோவிலாக சென்று தரிசனம் செய்து வருகிறார். 

இதனிடையே நாகையில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழாவில் கலந்துகொள்ள சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் மஹா புஷ்கரத் திருவிழாவில் கலந்துகொண்டு காவிரியில் புனிதநீராடினார். அமைச்சர்களும் புனிதநீராடினார்கள்.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றுள்ளார். 

அங்கு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் முதல்வர் பழனிசாமியை வரவேற்றனர்.  நாளை காலை நடைபெறும் சிறப்பு ஆராதனை சேவையில் முதல்வர் பங்கேற்கிறார். 

துணை முதல்வர் OPS நேற்றிரவு திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது. 1967-ம் ஆண்டுக்கு பிறகு திருப்பதிக்கு செல்லும் முதல் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தான். 

இதற்கு முன் முதலமைச்சராக இருந்தவர்கள் பதவியில் இருந்த போது திருப்பதிக்கு சென்றதில்லை. ஓ.பன்னீர்செல்வம் கூட அமைச்சராக இருந்த போது தான் திருப்பதிக்கு சென்றுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

அமர்பிரசாத்துடன் ஆந்திரா பக்கம் கரை ஒதுங்கிய அண்ணாமலை..! அதிமுக பேச்சு வார்த்தையில் கழட்டிவிட்ட பாஜக..!
தவெகவுடன் கூட்டணிக்கு தவமிருக்கும் அதிமுக.. விஜய் போட்ட ஒரே நிபந்தனை... டரியலாகும் இபிஎஸ்..!