சட்டமன்ற தேர்தல் நேரத்தில் தனக்கு வேண்டியவர்களுக்கு சீட் கொடுக்க வேண்டும் என பிரச்சினை செய்தார். முதல்வர் வேட்பாளர் தேர்விலும் 10 நாட்கள் பிரச்சினை நீடித்தது என்று கூறியுள்ளார் முன்னாள் அமைச்சர் தங்கமணி.
நாமக்கல் மாவட்ட அதிமுக செயல் வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசிய போது, அதிமுகவில் இருக்கின்ற நிலைமையை பார்த்து கட்சி இருக்குமா ? இரட்டை இலை இருக்குமா ? என தொண்டர்கள் குழம்பி இருக்கிறார்கள். நான் பல்வேறு பிரச்சினைகள் நடந்த போதிலும் அங்கேயே தான் இருந்தேன். அதிமுக ஆட்சி இருக்கின்ற போது ஓபிஎஸ் தர்ம யுத்தம் நடத்தினார். பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சிக்கு எதிராக எதிர்த்து வாக்களித்தவரை துணை முதல்வர் ஆக்கினார்.
அந்நிலையில் ஓபிஎஸ் அவர்களிடம் 12 எம்.எல்.ஏக்கள் மட்டுமே இருந்தனர். அப்படியிருந்தும் அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமிம் ஓபிஎஸ்சை அரவணைத்தார். சட்டமன்ற தேர்தல் நேரத்தில் தனக்கு வேண்டியவர்களுக்கு சீட் கொடுக்க வேண்டும் என பிரச்சினை செய்தார். முதல்வர் வேட்பாளர் தேர்விலும் 10 நாட்கள் பிரச்சினை நீடித்தது.
இதையும் படிங்க..“மருத்துவமனையில் சவுக்கு சங்கர்.. முதல்வருக்கு பறந்த கடிதம் !” அடுத்து என்ன ? பரபரப்பு சம்பவம்
முதல்வராக சிறப்பாக பணி புரிந்த நிலையில் வேண்டா வெறுப்பாக தான் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக ஓபிஎஸ் ஏற்றுக் கொண்டார். வெற்றி வாய்ப்பை இழந்த பிறகும் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதிலும் ஓபிஎஸ் பிரச்சனை செய்தார். நாடாளுமன்ற மேலவை தேர்தலில் எப்போதுமே அதிமுக தான் வேட்பாளர்களை அறிவிக்கும். இந்த முறை திமுக வெளியிட்டுவிட்டது.
அதிமுக மேலவை வேட்பாளர்கள் தேர்வில் ஓபிஎஸ் அவர்கள் கால தாமதம் செய்ததால் தான் இறுதி நேரத்தில் தான் வெளியிடப்பட்டன. அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தான் ஒற்றைத்தலைமை வேண்டும், எடப்பாடி பழனிச்சாமி வரவேண்டும் என அனைவரும் தெரிவித்தனர். ஓபிஎஸ் அவர்கள் ஏற்க மறுத்து விட்டார்.
இருந்தபோதிலும் மரியாதை குறைவாக நடந்து விடக்கூடாது என்பதற்காக ஒபிஎஸ் அவர்களுக்கு கட்சியின் இணை பொதுச்செயலாளர் பதவி வழங்குவதாக எடப்பாடி கூறினார். ஒபிஎஸ் மகனுக்கு மந்திரி பதவி கொடுக்க வேண்டும் என தெரிவித்தார். அதையும் வழங்குவதாக எடப்பாடி தெரிவித்தார்’ என்று கூறினார்.
இதையும் படிங்க..உட்கட்சியில் உள்குத்து.! கோபத்தில் ஆக்சனில் இறங்கிய ஸ்டாலின் - திமுக தொண்டர்கள் டூ அமைச்சர்கள் ஷாக் !