எக்குத்தப்பா பேசி எடப்பாடியை மண்டை காய விடும் மோஸ்ட் சீனியர் சீனி! மாண்புமிகுகளின் உளறலால் அக்கக்காக பிரித்து மேயும் மீம்ஸ் டீம் அட்மின்கள்...

Asianet News Tamil  
Published : Jun 20, 2018, 01:46 PM ISTUpdated : Sep 19, 2018, 02:33 AM IST
எக்குத்தப்பா பேசி எடப்பாடியை மண்டை காய விடும் மோஸ்ட் சீனியர் சீனி!  மாண்புமிகுகளின் உளறலால் அக்கக்காக பிரித்து மேயும் மீம்ஸ் டீம் அட்மின்கள்...

சுருக்கம்

edappadi palanisamy full upset mood regards dindukal srinivasan speech

அதிமுகவில் எம்ஜிஆர் காலத்திலிருந்து  சீனியராக இருக்கும் திண்டுக்கல் சீனிவாசன்   ஊடகங்களுக்கு தீனி போடும் சர்ச்சை பேச்சுக்கு சொந்தக்காரர்.  சீனிவாசன் வாயைத் திறந்தால் என்ன பேசுவாரோ என சொந்த கட்சியினரே  பயந்து நடுங்குகின்றனர், ஆனால் சும்மா விடுமா மீடியா புலிகள்? கேமராவை ரெடியாக வைத்துக் கொண்டு சீனியை சுற்றும் எரும்பைப்போல சோற்றி சுற்றி வருகின்றனர்.  .

நேற்று முன்தினம்  வேடசந்தூரில் நடந்த பொதுக் கூட்டத்தில், ‘அம்மா கொள்ளையடிச்ச பணத்தை தினகரன் திருடி செலவு பண்ணிக்கிட்டு இருக்காரு’ என திண்டுக்கல்காரரின் பேச்சு எடப்பாடியார் முதல் கிளை செயலாளர் ஏழுமலை வரை சீனியை பார்த்து நடுங்குகின்றனர்.

ஏற்கனவே, தமிழகம் முழுதும் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழா முன்னோட்டமாக கடந்த வருடம் ஜூன் 21 ஆம் தேதி மதுரையில் கால்கோள் விழா நடத்தினார். அப்போது பேசிய சீனி, 'விழாவிற்கு மற்ற மாநில முதல்வர்களை அழைப்பீர்களா' என நிருபர்கள் கேட்டதற்கு. நம்ம சீனி என்ன சொன்னாருன்னு தெரியுமா?, ‘'தம்பி, அவுங்கள்ள யாருக்கு எம்.ஜி.ஆரை தெரியும்?'' என கேட்டு அதிமுக புள்ளிகளை அலறவிட்டார். எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து இருக்கும் சீனிவாசனுக்கு எதிராக எம்ஜிஆர் அமைப்புகள் போர்க்கொடி தூக்கின.

இதற்கு முன்னாடியோ அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணன் திண்டுக்கல்லு “அம்மா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நாங்கள் யாரும் நேரில் சென்று பார்க்கவில்லை. சசிகலா குடும்பம் எங்களைப் பார்க்கவிடவில்லை. அம்மாவை நாங்க பார்த்ததாகவும், அம்மா இட்லி சாப்பிட்டார் சட்னி சாப்பிட்டார்னு நாங்கள் சொன்னதெல்லாம் பொய். சசிகலா குடும்பம் கூறச்சொன்னதைத்தான் வெளியில் சொன்னோம். மூத்த அமைச்சர் என்ற முறையில் உண்மையைக் கூற வேண்டிய கட்டாயம் வந்திடுச்சு இப்ப, பொய் சொன்னதுக்கா மக்கள் மன்னிக்கணும்’’ என அடுத்த பீதியை கிளப்பினார்.

அதெல்லாம் கூட பரவாயில்ல, வார்த்தைக்கு வார்த்தை அம்மா அம்மா என சொல்லும் இவர், “மறைந்த முதல்வர் அம்மாவின் ஆசிபெற்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மா ஆட்சியை விட இப்போதைய ஆட்சி பயங்கரமாக போய்க்கொண்டிருக்கிறது. அம்மாவிடம் மனு கொடுத்தால் உடனே அதிகாரிகளுக்கு அனுப்பிவிடுவார். முதல்வர் பழனிச்சாமியோ அதை படித்துபார்த்து அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார்’’ என ஜெயலலிதாவை விட ஒரு படி மேலே வைத்து எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்தார்.

இந்த சர்ச்சைப் பேச்சுகளில் லேட்டஸ்டாகத்தான் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நேற்று அதிமுக சார்பில் காவிரி நதிநீர் வெற்றி விளக்கப் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், "18எம்.எல்.ஏ.க்களும் ஆளுநரிடம் சென்று முதல்வரை மாற்ற வேண்டும் என்று மனு கொடுக்கிறார்கள் என்று சொன்னால் நாங்கள் சும்மாவா இருக்க முடியும். இதற்கு விளக்கமளிக்க 18பேருக்கும் ஒருமாதம் வரை அவகாசம் கொடுக்கிறார் சபாநாயகர். ஆனால் அவர்கள் விளக்கம் அளிக்காமல் மைசூர், அமெரிக்கா என்று ஜாலியாக சுற்றிக் கொண்டுள்ளனர். அவர்கள் அம்மாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை தினகரன் மூலம் பெற்றுக் கொண்டுள்ளனர் அல்லது ஸ்டாலின் மூலம் வாங்கிக் கொண்டுள்ளனர்’’ என்று அடுத்த சர்ச்சையை பற்ற வைத்தார்.

அதென்ன சர்ச்சைப்பேச்சு, அமைச்சரின் பேச்சால் சலசலப்பு இல்லாத ஒன்றைக்கூறினால் இப்படி சொல்வதில் அர்த்தமுண்டு, திண்டுக்கல் சீனிவாசன் இருப்பதைத்தானே கூறினார். தனி நீதிமன்றமும் சரி உச்ச நீதிமன்றமும் ஜெயலலிதாவை கொள்ளைக்காரி என்றும் அவர் சார்ந்தவர்களை கொள்ளையிடுவதற்க்காகவே கூடிய கூட்டமெனவும் சாடியுள்ளது, ஒன்றை மறந்து விடாதீர் இன்று கூட  அந்த அம்மையார் உயிரோடிருந்தால் தன் ஆருயிர் தோழியுடன் பரப்பன அக்ரஹார சிறையில் A1 ஆகவே இருந்திருப்பார் என சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

ஜெயலலிதாவை கொள்ளையடித்தார் என்று மேடையில் முழங்குகிறார் திண்டுக்கல் சீனிவாசன் .

ஆனால், செல்லூர் ராஜூவோ ஒரு படி மேலே போய், ஜெயலலிதா உழைத்ததே இல்லை என்று போஸ்டரே அடித்து ஊரெல்லாம் ஒட்டிவிட்டார். என ஆதரங்களோடு அதிமுக அமைச்சர்களின் உளறல் செயல்களை அக்கக்காக பிரித்து மேய்கின்றனர்.

PREV
click me!

Recommended Stories

காப்பி அடிக்கிறாங்க மிஸ்.. இன்னும் நல்லா கதறுங்க.. திமுகவை கலாய்த்து பதிலடி கொடுத்த அதிமுக!
பொங்கல் விழாவில் அரசியல் பேசாதீங்க.. மேடையில் அவமானப்பட்ட தவெக தலைவர்.. என்ன நடந்தது?