சுற்றுச்சூழல் பற்றி பேசுவது தவறா? மக்கள் எல்லாவற்றுக்கும் கைது செயப்படுகிறார்கள்! கமல் வேதனை

 
Published : Jun 20, 2018, 01:11 PM ISTUpdated : Sep 19, 2018, 02:33 AM IST
சுற்றுச்சூழல் பற்றி பேசுவது தவறா? மக்கள் எல்லாவற்றுக்கும் கைது செயப்படுகிறார்கள்! கமல் வேதனை

சுருக்கம்

Is it wrong to talk about environment? - Kamal Hasan

சுற்றுச்சூழல் குறித்து பேசினாலே குற்றம் என்று சொல்வது ஒத்துக்கொள்ள முடியாத ஒரு விஷயம் என்றும் அந்த ஆதங்கமும் அந்த கவலையும் எல்லா சிட்டிசனுக்கும் இருக்கும் எனக்கும் இருக்கு என்று மக்கள் நீதி மய்யக் கட்சி தலைவர் கமல்ஹாசன்

சேலம் - சென்னை இடையே கண்டிப்பாக பசுமை வழிச்சாலை அமைந்தே தீரும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 8 வழிப்பாதையாக பசுமை வழிச்சாலை அமைப்பதற்கான நடவடிக்கையில் மத்திய - மாநில அரசுகள் களமிறங்கியுள்ளன.

சாலைக்காக கையகப்படுத்தப்படஉள்ள விளை நிலங்களின் உரிமையாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள், இயற்கை ஆர்வலர்கள் என பலர் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். 

அதேபோல் சேலம் - சென்னை பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக எதிர்கட்சிகளும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இது குறித்து மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கருத்து தெரிவிக்கும்போது, சுற்றுச்சூழலைப் பற்றி பேசினாலே குற்றம் என்பதை ஏற்க முடியாது என்றார். மக்களை எல்லா விஷயத்திற்கும் கைது செய்கிறார்கள். சுற்றுச்சூழல் பிரச்சனைப் பற்றி பேசினாலே கைது செய்து வருகிறார்கள்.

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு விரைவில் அங்கீகாரம் கிடைக்கும். சின்னம் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதில் விரைவில் ஒரு தீர்வு கிடைக்கும் என்று நம்புவதாக கமல் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

இப்படியொரு ப்ளானா..? விஜயின் டபுள் ஸ்டாண்ட் ..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!
திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!