மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: முதல்வர் அறிவிப்பு

 
Published : Jun 20, 2018, 01:24 PM ISTUpdated : Sep 19, 2018, 02:33 AM IST
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: முதல்வர் அறிவிப்பு

சுருக்கம்

AIIMS hospital in Madurai - CM Edappadi Palanasamy

மதுரை மாவட்டம், தோப்பூரில் 200 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதை அதிகாரப்பூர்வமாக அவர் இன்று அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களிடம் கூறும்போது, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோரிக்கையையேற்று தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு முன்வந்துள்ளது. 

தமிழக அரசின் கோரிக்கையின்படி மத்திய குழு 5 இடங்களில் பார்வையிட்டது. தஞ்சாவூரில் செங்கிப்பட்டி, மதுரையில் உள்ள தோப்பூர், செங்கல்பட்டு, ஈரோட்டில் பெருந்துறை, புதுக்கோட்டை ஆகிய 5 இடங்களை பார்வையிட்டது. இப்போது மதுரையில் மருத்துவமனையை அமைப்படும் என்ற ஆணையை தமிழக சுகாதார செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. 

அதன்படி, மதுரை, தோப்பூரில் 750 படுக்கை வசதியுடன் கூடிய நவீன மருத்துவமனை ரூ.15,000 கோடி மதிப்பில் அமைய உள்ளது. இங்கு சுமார் 100
மருத்துவர்களுக்கான பணி ஏற்படுத்தப்படும்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க உத்தரவிட்ட பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து தரும் என்று முதலமைச்சர் கூறினார். 

PREV
click me!

Recommended Stories

திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு
திமுகவை நத்தி பிழைப்பதற்காக.. நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு..! குருவுக்கு எதிராக அக்னியை கக்கும் நாஞ்சில்