ஜெயலலிதாவின் வெற்றிக் கூட்டணிக்குள் குண்டுவைத்து, கூறு போட்ட எடப்பாடியார்! அதிரடி தகவல்கள்...

By sathish kFirst Published Sep 24, 2018, 11:34 AM IST
Highlights

கருணாஸ் எம்.எல்.ஏ.வின் கைதை பாரபட்ச நடவடிக்கை, சர்வாதிகார பாய்ச்சல்... என்றெல்லாம் குற்றம் சாட்டுகின்றன எதிர்கட்சிகள். ஹெச்.ராசாவும், எஸ்.வி.சேகரும் பேசியதை விட அதிகமாக கருணாஸ் பேசிவிட்டாரா? அல்லது கைது செய்யப்படுமளவுக்கே அவர் பேசியிருக்கிறார் என்றால் அவர்கள் இருவரையும் ஏன் கைது செய்யவில்லை? என்பதே எதிர்தரப்பின் கேள்வி. 

கருணாஸ் எம்.எல்.ஏ.வின் கைதை பாரபட்ச நடவடிக்கை, சர்வாதிகார பாய்ச்சல்... என்றெல்லாம் குற்றம் சாட்டுகின்றன எதிர்கட்சிகள். ஹெச்.ராசாவும், எஸ்.வி.சேகரும் பேசியதை விட அதிகமாக கருணாஸ் பேசிவிட்டாரா? அல்லது கைது செய்யப்படுமளவுக்கே அவர் பேசியிருக்கிறார் என்றால் அவர்கள் இருவரையும் ஏன் கைது செய்யவில்லை? என்பதே எதிர்தரப்பின் கேள்வி. 

ஆனால், தமிழக அரசின் இந்த செயலை எடப்பாடியார் செய்த அரசியல் தந்திரமாகத்தான் பார்க்கிறது அ.தி.மு.க.
காரணம்?....

ஜெயலலிதாவின் கூட்டணிக்குள் வந்து, இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற கருணாஸ், தனியரசு, தமீமுன் அன்சாரி மூவரும் ஜெ., மரணத்துக்குப் பிந்தைய அரசியலில் மூவர் அணியாக செயல்பட்டு வந்தனர். இவர்களின் செயல்பாடு வெகு சில நேரங்களில் தமிழக அரசுக்கு ஆதரவாகவும், பல வேளைகளில் தமிழக அரசுக்கு பெரும் தலைவலியாகவும் இருந்து வந்தன. 

கருணாஸ் தன்னை சசிகலாவின் ஆதரவாளராகவே இன்று வரை வெளிப்படுத்துகிறார். ‘எனக்கு அரசியல் வாழ்க்கை அளித்த சின்னம்மாவுக்கு எப்போதும் நன்றியோடு இருப்பேன்’ என்று அதை நியாயப்படுத்துகிறார். சசியின் விசுவாசி எனுக் வகையில்  தினகரனின் ஆதரவாளராகவே பார்க்கப்படுகிறார். தமீமுன் அன்சாரியோ, சிறுபான்மை காவலர்களாக தன்னை காட்டிக் கொள்ளும் தி.மு.க.வின் அபிமானியாகவே  செயல்பட்டு வருகிறார். ‘தி.மு.க.வுடன் கூட்டணி’ என்று சொல்லவில்லையே தவிர அக்கட்சியின் அரசியல் நிலைப்பாடுகளை ஆதரித்தும், அதன் மேடைகளில் பேசியும் வருகிறார். தனியரசு மட்டுமே மதில் மேல் பூனை! இங்கேயும் தாவி விளையாடுவார், அங்கேயும் பாய்ந்து பதுங்கிக் கொள்வார். 

ஆக இந்த மூன்று கூட்டணி எம்.எல்.ஏ.க்களால் எடப்பாடி அரசுக்கு எப்பவுமே தலைவலிதான். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் எப்போது வேண்டுமானாலும் தீர்ப்பு வரும் எனும் நிலையில், தீர்ப்பு அரசுக்கு பாதகமாக வந்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்குமேயானால் இந்த மூவரின் வாக்கு முக்கியம். இவர்கள் அரசுக்கு ஆதரவாக நடந்துவிட்டால் சிக்கலில்லை. ஆனால் இவர்கள் அரசுக்கு எதிராய் போகும் நிலை வந்தால் பெரும் சிக்கலாகும். 

எனவேதான் எங்கே சென்றாலும் ஒன்றாய் செல்லும் இந்த மூவர் கூட்டணியை உடைக்க  பெரிதும் பிளான் செய்தது எடப்பாடி டீம். அதற்கு மிக சரியான தருணம் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த வகையில்தான் வகையாய் வந்து சிக்கினார் கருணாஸ். இப்போது அவரை தூக்கி உள்ளே வைத்துவிட்ட நிலையில், எடப்பாடியாரின் முயற்சி 50% ஜெயித்துவிட்டதாகவே கொண்டாடுகிறது அ.தி.மு.க. 

காரணம், கருணாஸ் கைது குறித்து கூட்டாக அறிக்கை வெளியிட்டிருக்கும் தனியரசு மற்றும் தமீமுன் இருவரும் “கருணாஸ் பேச்சின் சில பகுதிகள் எந்த விதத்திலும் ஏற்க முடியாதவை. அதைக்கேட்டு நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். நாங்கள் அவரை, அந்தப் பேச்சிற்கு வருத்தம் தெரிவிக்க கூறிய பின் இரண்டு முறை வருத்தங்களை தெரிவித்தார். ஆனாலும் கைதாகியிருக்கிறார். 

கருணாஸின் கைதை நாங்கள் சட்ட நடவடிக்கையாகவே பார்க்கிறோம், புரிந்து கொள்கிறோம்.  அதேசமயம் நீதிமன்றத்தையும், காவல்துறையையும் கொச்சையாக பேசிய ஹெச்.ராஜா! பெண் பத்திரிக்கையாளர்களை பற்றி அசிங்கமாக கருத்து பதிவிட்ட எஸ்.வி.சேகர் இருவர் மீதும் இப்படி நடவடிக்கை எடுக்காதது ஏன்?” என்று குறிப்பிட்டுள்ளார்கள். 

"

ஆக மொத்தத்தில் கருணாஸின் கைதை ‘சட்ட நடவடிக்கையே!’ என்றும் ‘அவரது பேச்சின் சில பகுதியை ஏற்கவே முடியாது!’ என்றும் இரு எம்.எல்.ஏ.க்களும் கூறியிருப்பது இந்த மூவர் கூட்டணிக்குள் குண்டு வைத்துள்ளது. கருணாஸின் ஆதரவாளர்கள் இந்த வார்த்தைகளை சுட்டிக்காட்டி வருத்தம் தெரிவித்துள்ளதோடு, ஆதங்கமும் காட்டியுள்ளனர். 

எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின், கருணாஸுக்கு ஆதரவாக பிரயோகித்திருக்கும் வார்த்தைகளை கூட இவர்கள் இருவரும் பயன்படுத்தவில்லையே! அப்படியானால் அரசுக்கு பயப்படுகிறார்களா? என்று நறுக்கென கேட்டுள்ளனர் தங்கள் சமூக வலைதள பக்கங்களில். 

இந்த சூழல் மூலம் கருணாஸுடன் மற்ற இரு எம்.எல்.ஏ.க்களும் முரண்பாடு கண்டுவிட்டதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். கருணாஸ் இனி வெளியே வந்த பின் இவர்களுடன் பழைய படி ஒட்டி உறவாட மாட்டார்! என்றே கணிக்கப்படுகிறது. ஆக தங்களுக்கு முழு ஆதரவை தராமல் குழப்பிக் கொண்டும், தினகரனை மறைமுகமாக ஆதரித்துக் கொண்டும் இருந்த மூவரிடையே தந்திரமாக பிளவை உருவாக்கிவிட்டார் எடப்பாடியார்! என்றே பேசுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள். 

இனி தனியரசு மற்றும் தமீமுன் இடையில் சிக்கலை உருவாக்குவதொன்றும் பெரிய வேலையே இல்லை! என்று கொக்கரிக்கிறது ஆளுங்கட்சி லாபி!

click me!