அய்யா எங்களப் பாத்து ரொம்ப மெரண்டு போய் கிடக்காரு ! ஸ்டாலினைக் கடுப்பேற்றிய எடப்பாடி !!

Published : Apr 02, 2019, 10:50 PM IST
அய்யா எங்களப் பாத்து ரொம்ப மெரண்டு போய் கிடக்காரு !  ஸ்டாலினைக் கடுப்பேற்றிய எடப்பாடி !!

சுருக்கம்

அதிமுக தலைமையில் அமைந்துள்ள இந்த கூட்டணியைப் பார்த்து ஸ்டாலின் மிரண்டு போயிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கிண்டல் செய்துள்ளார்.  

தூத்துக்குடி  மக்களவைத் தொகுதியில் பாஜக  வேட்பாளர் தமிழிசையை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது , நாடு பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனில் தகுதி வாய்ந்தவர் நாட்டை ஆட்சி செய்ய வேண்டும்.  அப்படி ஒரு தகுதி வாய்ந்தவர்தான் மிரதமர் மோடி என்று தெரிவித்தார்.

அதிமுக தலைமையில் அமைந்துள்ள நமது கூட்டணியைப் பார்த்து, ஸ்டாலின் மிரண்டுபோய் என்ன பேசுவது என தெரியாமல் உள்ளார் என குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி,  40 தொகுதிகள் மற்றும் இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என தெரிவித்தார். .

சில துரோகிகள் செய்த சதி காரணமாக 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் வருகிறது. இடைத்தேரதல் மூலம் சதிகாரர்களை வீழ்த்தி நாம் வெற்றி பெற வேண்டும்.தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை அதிமுக அரசு நிறைவேற்றுவதால் மக்கள் ஆதரவு தருகிறார்கள் என அவர் குறிப்பிடடார்.

ஏழைகளுக்கான திட்டங்களை தடுக்கும் கட்சி திமுக. தேர்தல் முடிந்த உடன் ரூ.2 ஆயிரம் நிதி உதவி திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் முதலமைச்சர் உறுதி அளித்தார்..

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு திமுக தான் அனுமதி வழங்கியது. திமுக ஆட்சியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடியிருக்கலாம். இந்த விவகாரத்தில் திமுக நாடகம் போட்டு, மக்களை ஏமாற்றுகிறது. 

அதிமுக அரசு தான் ஸ்டெர்லைட் ஆலையை மூடியது. ஓட்டுக்காக திமுக பொய் சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறது. கனிமொழியை வீழ்த்தும் சக்தி தமிழிசைக்கு மட்டுமே உண்டு. என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

பாஜகவின் புதிய தலைவராகிறார் நிதின் நபின்.. வேட்புமனு தாக்கல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது?
இறுக்கும் சிபிஐ... விஜய் எடுக்கும் இறுதி முடிவு..! தத்தளிக்கும் தவெக