ஸ்டாலினும் எடப்பாடியும் உள்ளுக்குள் நண்பர்கள்தான்! வெளியிலதான் வெட்டுக்குத்து... பெரிய ரகசியத்தை உடைத்த குட்டி விமானம்!

By sathish kFirst Published Dec 4, 2018, 6:31 PM IST
Highlights

இருவரும் பரஸ்பரம் ஒருவரையொருவர் எதிரியாக பாவித்தும், அடக்கியாளவும் முனைகிறார்கள்தான். இதைவைத்து ஜெயலலிதா வின் அ.தி.மு.க.வுக்கும், கருணாநிதியின் தி.மு.க.வுக்கும் இருந்தது போன்ற போர்தான் இன்னமும் நிகழ்கிறது

ஜெயலலிதா இறந்தபோது கருணாநிதியின் நினைவாற்றல் ஆரோக்கியமாக இல்லை. சசிகலாதான் அ.தி.மு.க.வின் அடுத்த தலைமை எனும் சூழல் உருவானபோது, தி.மு.க.வின் அடுத்த தலைவர் எனும் நிலையை கிட்டத்தட்ட எட்டிவிட்ட ஸ்டாலினோ ‘என் தலையெழுத்து இந்தம்மாவையெல்லாம் எதிர்த்து அரசியல் செய்யணுமா?’ என்று தன் நெருங்கிய வட்டாரத்தில் நொந்து கொண்டார் விரக்தி சிரிப்புடன். ஆனால் காட்சிகள் மாறி, எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் தலைமை பீடத்தில் வந்தமர்ந்தார். 

அப்போது சகாக்கள் ஸ்டாலினை பரிதாபமாய் பார்க்க, ‘அ.தி.மு.க. எனும் மக்கள் விரோத இயக்கத்தை மண்ணோடு மண்ணாக்க வேண்டும்.’ என்று தலைப்பை மாற்றி தன் கெத்தை தக்க வைத்துக் கொண்டார். 

என்னதான் எமர்ஜென்ஸியில் அடிபட்டு, அரசியலில் புடம்போடப்பட்டு புடம் போடப்பட்டு ஸ்டாலின் வளர்ந்து நின்றாலும் கூட, ‘காப்பி & பேஸ்ட்’ என்று ஷார்ட் கட்டில் வந்த எடப்பாடியாரே முதல்வர் எனும் முறையில் அவரை எதிர்த்து அரசியல் செய்துதானே ஆக வேண்டும். 

ஸ்டாலினும், பழனிசாமியும் பரஸ்பரம் அறிக்கை வடிவிலும், சட்டசபையில் முதல்வர் - எதிர்கட்சி தலைவர் எனும் முறையில் நேரடியாகவும் படு பயங்கரமாக மோதிக் கொள்கின்றனர்தான். இருவரும் பரஸ்பரம் ஒருவரையொருவர் எதிரியாக பாவித்தும், அடக்கியாளவும் முனைகிறார்கள்தான். இதைவைத்து ஜெயலலிதா வின் அ.தி.மு.க.வுக்கும், கருணாநிதியின் தி.மு.க.வுக்கும் இருந்தது போன்ற போர்தான் இன்னமும் நிகழ்கிறது என்று பொதுவெளியில் கருத்துகள் பரவி கிடக்கின்றன. இரண்டு கட்சியின் இரண்டாம் நிலை நிர்வாகிகள்  முதல் தொண்டர்கள் வரையிலும் இப்படியேதான் நம்புகின்றனர். 

ஆனால் யதார்த்த சூழல் அப்படியில்லை என்று உரக்க சொல்கிறது ஒரு விமானம். 
என்ன புதிர் இது? என்கிறீர்களா! புதிரில்லை...உண்மையே. 

ஸ்டாலினின் பி.ஏ.வான தினேஷ்குமாரின் கல்யாணம் கடந்த 25-ம் தேதியன்று நாமக்கல்லில் நடந்தது. அந்த நிகழ்வுக்கு ஸ்டாலினும், பொன்முடியும் தனியாருக்கு சொந்தமான குட்டி சொகுசு விமானத்தில் சென்றார்களாம். இருவரும் விமான படிக்கட்டில் ஏறுவது போலவும், விமானத்தினுள்ளே அமர்ந்திருப்பதுமான போட்டோக்கள் இணையத்தை கலக்கின. 

இந்த குட்டி விமானம்தான் ஸ்டாலின் - எடப்பாடியார் இடையிலான பெரிய ரகசியத்தை உடைத்திருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். அதாவது, அந்த குட்டிவிமானமானது நாமக்கல்லை சேர்ந்த ஒரு பெரும் தொழில் அதிபரான பிரபாகரனுக்கு சொந்தமானதாம். நார்த் இண்டியாவில் சுரங்கத் தொழில் செய்து வரும் இவர் சேலத்திலும் படா சொத்துக்கள் வைத்திருக்கிறாராம். எடப்பாடியாரின் சமுதாயத்தை சேர்ந்த இவர் அவரது தூரத்து சொந்தமும் கூட. 

நாமக்கள் அமைச்சர் தங்கமணி வாயிலாக எடப்பாடியாருடன் மிக நெருங்கிய உறவிலும், நட்பிலும் திளைக்கிறாராம் பிரபாகரன். கிட்டத்தட்ட மூன்றுக்கும் மேற்பட்ட சிறிய ரக விமானங்களை சொந்தமாக வைத்திருக்கும் இப்பெரும் கோடீஸ்வரர் முதல்வருக்கு நெருக்கமென்பதில் ஆச்சரியமில்லை. மேலும் அவர் தன்னை தமிழக முதல்வரின் உறவினர் என்று சொல்லி சந்தோஷப்பட்டுக் கொள்வதிலும் ஆச்சரியமில்லை. 
ஆனால் அந்த மனிதரின் விமானத்தில் ஸ்டாலின் வந்ததுதான் அதிர்ச்சியை கிளப்பியிருக்கிறது! முதல்வருக்கு மிக நெருக்கமான நபரின் பாக்கெட்டிலுள்ள விமானத்தில் ஸ்டாலின் வரவேண்டிய அவசியமென்ன? சென்னையிலிருந்து வேறு விமான சேவையே இல்லையா? என்பதுதான் கேள்வி. 

ஸ்டாலின் பயணம் செய்த அந்த விமானத்தின் பின்னணியில் இவ்வளவு பெரிய அரசியல் உள்ளதை அ.தி.மு.க.வின் ஒரு நிர்வாகிதான் வேண்டுமென்றே லீக் செய்திருக்கிறாராம். இது எடப்பாடியாரின் நெருங்கிய புள்ளிக்கு சொந்தமான விமானம் என்று தெரியாமலா ஸ்டாலின் பயணம் செய்தார்? எல்லாம் அவருக்கு தெரியும், தெரிந்தே பறந்திருக்கிறார். வெளியே ஆயிரம் கூவல் கூவினாலும் கூட, உள்ளுக்குள்ளே முதல்வருடன் நட்பில்தான் இருக்கிறார் ஸ்டாலின்! என்று தி.மு.க. தலைவரின் பெயரைக்கெடுப்பதற்காக இந்த ரகசியத்தை அந்த நபர் உடைத்தாரா? அல்லது ஸ்டாலினுடன் நட்பில் எடப்பாடியார் இருப்பதாக காட்டுவதற்காக செய்தாரா? என்பதுதான் இப்போது கேள்வியே! என்கிறார்கள். 

ஆக குட்டி விமானம், ஒரு பெரிய ரகசியத்தை உடைத்துவிட்டது என்பதே டெல்லி வரை பரபரப்புக்கும் ஹாட் ஹைலைட்.

click me!