அ.தி.மு.க.விலிருந்து ஆளை இழுக்கிறார் ரஜினி!? தினகரன் கோஷ்டின்னாலும் ஓ.கே.தானாம்!

By vinoth kumarFirst Published Dec 4, 2018, 5:33 PM IST
Highlights

சக அரசியல் இயக்கங்களில் இருந்து முக்கிய நிர்வாகிகளை இழுக்கும்  மூவ்களுக்குள் இறங்கிவிட்டாராம். அதிலும் குறிப்பாக அ.தி.மு.க.வில் பதவி மற்றும் அங்கீகாரம் கிடைக்காத ஆனால் வெகுஜன அந்தஸ்துடைய நபர்களை இழுப்பதற்கான தூண்டிலை விசிவிட்டார் என்று உறுதியான தகவல் கிடைத்திருக்கிறாதாம் ஆராய்ச்சி செய்தவர்களுக்கு.

நான் அரசியலையும் விளையாட்டாகதான் பார்க்கிறேன். ஆனால் அது மிகவும் ஆபத்தான விளையாட்டு என்பதால் மிகவும் கவனமாக விளையாடுகிறேன்!’ என்று தெறிக்க விட்டிருக்கிறார் ரஜினி. இது ஒட்டுமொத்த தமிழக அரசியல் தலைவர்களையும் நெற்றி சுருக்க வைத்திருக்கிறது. இந்த வார்த்தைகளுக்குப் பின்னர் மிகப்பெரிய உள் அரசியல் இருக்கிறது என்று அவர்கள் சந்தேகிக்கிறார்கள். 

இந்த சூழலில் கடந்த சில நாட்களாகவே ரஜினி மற்றும் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசத்தை மிக மூர்க்கமாக எதிர்த்து வருகிறது ஆளுங்கட்சியான அ.தி.மு.க. நட்சத்திரங்களின் அரசியல் வலத்தை மற்ற அல்லுசில்லு கட்சிகள் கூட பெரிதாய் எடுத்துக் கொள்ளாத நிலையில், ஆளுங்கட்சி இவ்வளவு உக்கிரமாய் துடிப்பது ஏன்? என்பதுதான் அரசியல் விமர்சகர்களின் சந்தேகமாய் இருந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் ரஜினி மற்றும் அ.தி.மு.க. இரண்டு வட்டாரங்களிலும் இறங்கி ஒரு அலசு அலசிப் பார்த்தார்கள், ஏதோ கெண்டை, கெளுத்தி  கிடைக்குமென்று பார்த்தால் அய்யோ சுறாவே சிக்கியிருக்கிறதாம். 

அப்படி என்ன விவகாரம்?.... அரசியலுக்குள் கால் வைக்கும் ரஜினி, தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை வைத்து ‘ரஜினி மக்கள் மன்றம்’ எனும் அமைப்பை தொடங்கினார். அதன் பிறகு லைக்காவை சேர்ந்த ராஜூ மகாலிங்கம், டாக்டர் இளவரசன் போன்ற அரசியல் சாராத மனிதர்களை இணைத்து அதை திடப்படுத்தினார். அதில் ஏகப்பட்ட சாதகங்கள், பாதகங்கள், குழப்பங்கள், ஏற்ற இறக்கங்கள். 

இந்நிலையில் அடுத்த டார்கெட்டாக சக அரசியல் இயக்கங்களில் இருந்து முக்கிய நிர்வாகிகளை இழுக்கும்  மூவ்களுக்குள் இறங்கிவிட்டாராம். அதிலும் குறிப்பாக அ.தி.மு.க.வில் பதவி மற்றும் அங்கீகாரம் கிடைக்காத ஆனால் வெகுஜன அந்தஸ்துடைய நபர்களை இழுப்பதற்கான தூண்டிலை விசிவிட்டார் என்று உறுதியான தகவல் கிடைத்திருக்கிறாதாம் ஆராய்ச்சி செய்தவர்களுக்கு. அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்களை சேர்ந்த, தலைமை மீது அப்செட்டில் இருக்கக்கூடிய உணர்ச்சி மிகு புள்ளிகளை குறிபார்த்து இழுப்பதற்கான மூவ்களில் ரஜினி தரப்பு மளமளவென காய் நகர்த்தி வருகிறது என்கிறார்கள். 

யாரை டார்கெட் செய்யலாம்? யார் வளைந்து கொடுப்பார்கள்? யாரால் அரசியல் லாபம் கிடைக்கும்? என்று ‘வளைக்கப்பட வேண்டிய நபர்களை’ வட்டமிட்டு கொடுக்கும் பணியை பி.ஜே.பி.யின் அவுட்சோர்ஸிங் டீம் செய்து தலைமைக்கு கொடுக்க, அந்த தலைமையோ அதை ரஜினிக்கு தள்ளுகிறதாம். அப்படி பார்க்கப்போனால்,  பி.ஜே.பி.யையே ரஜினி அவுட்சோர்ஸிங்காக பயன்படுத்துகிறார் என்று தகவல். 

’கொஞ்சம் விட்டுப் பிடிக்கலாம்’ என்று அ.தி.மு.க. தலைமையால் ஓரங்கட்டி வைக்கப்பட்டிருந்த முக்கிய நிர்வாகிகளை இப்படி ரஜினி டீம் அணுகுவதை ஆளும் தரப்பு ஸ்மெல் செய்துவிட்டது. அதைத்தொடர்ந்தே இந்த தொடர் பாய்ச்சல்கள், திட்டல்கள் என்கிறார்கள். ரஜினியை பொறுத்தவரையில் நேரடி அ.தி.மு.க. நிர்வாகிதான் வேண்டும் என்றில்லையாம், அ.தி.மு.க. சாயமுடைய எந்த நபராய் இருந்தாலும் ஓ.கே.! என்கிறாராம். அதாவது தினகரனின் அ.ம.மு.க.விலிருந்தும் ஆளை இழுக்க தயாராக இருக்கிறார் ரஜினி. 

அந்த வகையில் சசிகலாவுக்கு துரோகம் செய்த வகையில் எடப்பாடியார் - பன்னீர் மீதும், தவறான முடிவெடுத்து தங்கள் எம்.எல்.ஏ. பதவி பறிபோக காரணமாக இருந்ததாக தினகரன் மீதும் கடும் கோபத்திலிருக்கும் தங்க தமிழ் செல்வனின் முழு பயோடேட்டாவையும் கேட்டு வாங்கி பார்த்துவிட்டு ‘சான்ஸ் உண்டா?’ என்று கேட்டிருக்கிறாராம் ரஜினி. அதாவது, பன்னீர்செல்வத்தை விட அதிகமாகவே இப்போது தங்கத்துக்கு மவுசு ஏறியிருக்கிறது.

 

குறிப்பிட்ட சமுதாயத்தில் மட்டுமில்லை ஒட்டுமொத்தமாகவே தங்கம் மின்னுகிறார்! ஆனால் அவரை ஏதோ ஒரு காரணத்துக்காக தினகரன் அமுக்கி வைக்கிறார்! என்றும், அணி மாறினால் வாரியத்தலைவர் பதவியே கிடைக்கும் வாய்ப்பிருந்தாலும் கூட சசிகலா மீதிருக்கும் விசுவாசத்தால் எடப்பாடி அணிக்கு போக தங்கம் மறுக்கிறார்! என்றும் ரஜினிக்கு வழங்கப்பட்ட அந்த பயோடேட்டாவில் தகவல்கள் இருந்ததாம். இதை பார்த்துவிட்டுதான் தங்கத்தை கட்டம் கட்ட நினைக்கிறாராம் ரஜினி. 

’அடுத்து தி.மு.க. ஆட்சிதான். பதவிக்கு வந்ததும் அதிகாரம், வருமானம் எல்லாம் குவியும்’ எனும்  பெரும் நம்பிக்கையில் இருப்பதால் தி.மு.க.விலிருந்து இப்போதைக்கு எந்த நிர்வாகியும் கழன்று வெளியே வர வாய்ப்பில்லை. ஆனால் அ.தி.மு.க.வில் பல கோஷ்டிகளாகிவிட்டது,  மக்கள் செல்வாக்கு இருந்தும் சிலருக்கு பதவிகள் இல்லை, அவர்கள் ‘அடுத்து இந்த கட்சி ஆட்சிக்குன் வர வாய்ப்பில்லை. கடைசி நிலையில் நமக்கு சம்பாதிக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டதே!’ எனும் ஏக்கத்தில் இருக்கிறார்கள். அவர்க்ளைத்தான் பார்த்து கொத்தி தூக்கும் முடிவில் ரஜினி இருக்கிறாராம். இதனால்தான் அளும் தரப்பு அல்லு தெறிக்க ரஜினியை விரட்டுகிறது ! என்கிறார்கள். ஹவ் இஸ் இட்!?

click me!