
இரட்டை இலை சின்னத்தை மீட்பது தொடர்பாக இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., மற்றும் அமைச்சர்கள் டெல்லி சென்றுள்ளனர்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசல் காரணமாக இரட்டை இலை சின்னத்தை, தேர்தல் ஆணையம் முடக்கி வைத்து நடவடிக்கை எடுத்தது.
இரட்டை இலை சின்னம் தங்களுக்கே சொந்தம் என்றும், தொண்டர்கள், நிர்வாகிகள் ஆதரவு தங்களுக்கே உள்ளது என்றும் கூறி, சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்ப்பட்டன.
எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைப்புகள் நடந்தன. முதலமைச்சர், துணை முதலமைச்சர் தரப்பில் அதிமுகவின் பொதுக்குழுவும், செயற்குழுவும் கூட்டப்பட்டன.
பொதுக்குழுக்கூட்டத்தில், சசிகலா நீக்கம் உட்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகியோருக்கு கூடுதல் அதிகாரம் தீர்மானங்களில் முக்கிய இடம் பிடித்தன.
இரட்டை இலை சின்னம் தொடர்பாக அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி. உதயகுமார், கே.பி. முனுசாமி உள்ளிட்டோர் இன்று டெல்லி கிளம்பினர்.