
அதிமுகவைப் பொறுத்தவரையில் சாதாரண தொண்டன் கூட உயர்ந்த பதவிகளுக்கு வரமுடியும் ஆனால் திமுகவில் "நிதிகள்" மட்டுமே பதவிக்கு வரமுடியும் என எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார். சாதாரண கிளைச் செயலாளராக இருந்த நான் அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தின் இடைக்கால பொதுச் செயலாளராக வந்திருக்கிறேன் இது திமுகவில் சாத்தியமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக பொதுக்குழுவில் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார். பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவுடன் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி நியமனம் செல்லாது என ஓபிஎஸ் தரப்பினர் வழக்கு தொடுத்து வருகின்றனர். இது ஒருபுறம் உள்ள நிலையில், எடப்பாடி பழனிச்சாமி திமுகவை கடுமையாக எதிர்த்து பேசி வருவதுடன், கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இதையும் படியுங்கள்: அதிமுக அலுவலக சாவி விவகாரம்.. இபிஎஸ்க்கு நெருக்கடி கொடுக்க ஓபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு..!
இந்நிலையில் சேலத்தில் பல்வேறு நல்ல திட்டங்களை துவக்கி வைத்து விட்டு சென்னை திரும்பினார், அப்போது திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வழியாக காஞ்சிபுரம் வந்தார் அப்போது அங்கு அவருக்கு அம்மாவட்ட அதிமுக சார்பில் பாலுசெட்டி சத்திரத்தில் 5 ஆயிரத்திற்க்கும் அதிகமான அதிமுக தொண்டர்கள் திரண்டு வரவேற்பு அளித்தனர். அதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அங்கு எடப்பாடி பழனிச்சாமி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அதிமுக என்ற இயக்கம் ஏழை எளிய சாமானிய மக்களுக்கான இயக்கம்.
இதையும் படியுங்கள்: ஆளுநர் மாளிகையில் ரஜினியும் ஆளுநரும் அரசியல் பேசியதில் என்ன தவறு இருக்கிறது.. சீறும் அண்ணாமலை.
இந்த இயக்கத்தில் ஒரு சாதாரண தொண்டன் கூட உயர்ந்த பதவிகளுக்கு வர முடியும், அதற்கு நானே சாட்சி, சாதாரண கிளைச் செயலாளராக இருந்த நான் இப்போது அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலராக வந்துள்ளேன். இது அனைத்தும் திமுகவில் மட்டுமே நடக்கும், இது ஒரு ஜனநாயக கட்சி, உழைக்கிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் என்றாவது ஒரு நாள் உயர்ந்த பதவிக்கு வருவார்கள். ஆனால் திமுகவில் அப்படி முடியுமா? உழைக்கிற தொண்டன் உயர்ந்த பதவிக்கு வர முடியுமா? அங்கு கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி போன்ற நிதிகளால் மட்டுமே வர முடியும்.
நிதிகளால் மட்டும்தான் தொடர்ச்சியாக வரிசையாக தலைமை பதவிகளுக்கு வரமுடியும், ஆனால் அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட பதவிக்கு வரலாம், எம்பி எம்எல்ஏ ஆகலாம். இதோ என்னை சுற்றி இத்தனை பேர் நிற்கிறார்கள், இப்படி ஸ்டாலினை சுற்றி நிற்க முடியுமா? அவரை நெருங்க முடியுமா? ஏனென்றால் நாங்கள் எல்லாம் ஒரே குடும்பமாக இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.