நடிகை சாந்தினி விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமியையும் விசாரிக்க வேண்டும்.. பெங்களூர் புகழேந்தி பகீர்.

By Ezhilarasan BabuFirst Published Jun 22, 2021, 12:41 PM IST
Highlights

இந்நேரத்தில் ஜெயலலிதாவாக இருந்திருந்தால் ஒரு நொடியில் தூக்கி இருப்பார் எனவும், நடிகை சாந்தினியோடு மேலும் பல அமைச்சர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுவதாகவும், தேவைப்பட்டால் இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமியை  விசாரிக்கத்தான் வேண்டுமெனவும் கூறியுள்ளார். 

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டனை ஏன் இன்னும் கட்சியிலிருந்து நிற்கவில்லை எனவும், இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமியையும் விசாரிக்க வேண்டும் எனவும் சமீபத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் துணை நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் அடையார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 6 பிரிவின்கீழ் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவாகிவிட்டார். 

தலைமுறை வாகிய அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிழைக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர். பின்னர் பெங்களூரிலுள்ள தனது நண்பர் சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் பதுங்கி இருந்த அவரை  தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் மணிகண்டனை ஜூலை 2ம் தேதி வரை 12 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிபதியின் உத்தரவை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.  

இந்நிலையில் அன்மையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட  புகழேந்தி, பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி 6 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டனை ஏன் இன்னும் கட்சியிலிருந்து நிற்கவில்லை என்றும், இந்நேரத்தில் ஜெயலலிதாவாக இருந்திருந்தால் ஒரு நொடியில் தூக்கி இருப்பார் எனவும், நடிகை சாந்தினியோடு மேலும் பல அமைச்சர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுவதாகவும், தேவைப்பட்டால் இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமியை  விசாரிக்கத்தான் வேண்டுமெனவும் கூறியுள்ளார். 

ஆரம்பத்தில் சாந்தினி தெரிவித்த புகாருக்கு மறுப்பு தெரிவித்த மணிகண்டன், பின்னர் சாந்தினி பணம் பறிக்கும் கும்பலை சேர்ந்தவர் எனக் கூறினார், இந்நிலையில் 6 பிரிவுகளின் கீழ் அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இப்படியே தொடர் குற்றச்சாட்டுக்கு ஆளானவரை இன்னும் அதிமுக தலைமை கட்சியிலிருந்து நிற்கவில்லை, தற்போதுள்ள அதிமுக தலைமை மணிகண்டனுக்கு ஏன் துணை போகிறது என்று தெரியவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.  

 

click me!