விரைவில் தொடங்குகிறது களையெடுப்பு..! திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு காத்திருக்கும் ஆப்பு..!

By Selva KathirFirst Published Jun 22, 2021, 12:33 PM IST
Highlights

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கொரோனா பரவல் கட்டுக்குள் வருவதற்கு முன்னரே மதுக்கடைகள் திறக்கப்பட்டுவிட்டன. இப்படி ஆட்சிக்கு வந்த ஒரு மாத்திற்குள்ளாகவே திமுக அரசு மீது அதிருப்திக்குரல்கள் எழ ஆரம்பித்துள்ளன. மேலும் சமூக வலைதளங்களிலும் திமுகவிற்கு எதிரான தீவிர பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

கோவை, தொடங்கி தென்காசி வரை திமுக மாவட்டச் செயலாளர்கள் சுமார் பத்து பேரை களையெடுக்க திமுக மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் குறைந்தது மாதம் ஒரு முறையாவது மாவட்டச் செயலாளர்களுடன் வீடியோ கான்பிரன்சிங்கில் மு.க.ஸ்டாலின் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தார். வாக்குப் பதிவு முடிந்த பிறகு கூட மாவட்டச் செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் பேசிக் கொண்டே இருந்தார். மேலும் மு.க.ஸ்டாலின் மட்டும் அல்லாமல் அவரது மருமகன் சபரீசனும் கூட கட்சி நிர்வாகிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்தார். ஆனால் தேர்தல் முடிந்து முடிவுகள் வந்து திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து கட்சி திக்கு தெரியாத காட்டில் தவிப்பது போன்ற நிலை ஏற்பட்டது.

திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கு முன்னரே சென்னை மதுரவாயலில் அம்மா உணவகம் அடித்து நொறுக்கப்பட்டது. இந்த விவகாரத்தில்  திமுகவின் பெயர் ஆரம்பத்திலேயே டேமேஜ் ஆனது. இதே போல் தென் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர் கமிசன் தொடர்பாக போட்ட உத்தரவு வெளிப்படையாகவே பேசப்பட்டு வருகிறது. அடிக்கடி ஏற்படும் மின்வெட்டும் திமுக அரசுக்கு தலைவலியாக போயுள்ளது. நீட் தேர்வு விவகாரத்தில் எதிர்கட்சிகளின் பிரச்சாரத்தை முறியடிக்க முடியாமல் மா.சுப்ரமணியன் திணறி வருகிறார். பெட்ரோல் விலையை குறைப்பதாக கூறிய வாக்குறுதியை தற்போது நிறைவேற்ற முடியாது என்று நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துவிட்டார்.

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கொரோனா பரவல் கட்டுக்குள் வருவதற்கு முன்னரே மதுக்கடைகள் திறக்கப்பட்டுவிட்டன. இப்படி ஆட்சிக்கு வந்த ஒரு மாத்திற்குள்ளாகவே திமுக அரசு மீது அதிருப்திக்குரல்கள் எழ ஆரம்பித்துள்ளன. மேலும் சமூக வலைதளங்களிலும் திமுகவிற்கு எதிரான தீவிர பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எதிர்கட்சியாக இருந்த போது சமூக வலைதளங்களில் திமுகவின் செயல்பாட்டிற்கும் ஆட்சிக்கு வந்த பிறகு இருக்கும் செயல்பாட்டிற்கும் ஏராளமான வேறுபாடுகள் தெரிய ஆரம்பித்துள்ளன. எனவே கட்சியின் இமேஜை சரி செய்வதுடன் அடுத்தடுத்து வரும் தேர்தல்களுக்கும் தயாராக வேண்டிய சூழல் உள்ளது.

தற்போது தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வந்துவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். எனவே விரைவில் கொரோனா கட்டுக்குள் வந்த பிறகு தினசரி அண்ணா அறிவாலயம் வரும் திட்டம் மு.க.ஸ்டாலினுக்கு இருப்பதாக சொல்கிறார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாவட்டம் என கட்சியின் செயல்பாடுகள் குறித்து அவர் ஆய்வு செய்ய உள்ளதாகவும் கூறுகிறார்கள். குறிப்பாக மாவட்டச் செயலளர்கள் தொடங்கி கிளை கழக செயலாளர்கள் வரை அனைவரையும் தொடர்பிலேயே வைத்திருக்கும் வகையில் செயல்திட்டம் ஒன்றை உருவாக்க உள்ளதாகவும் சொல்கிறார்கள். மேலும் சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த மாவட்டங்களின் செயலாளர்களை மாற்றும் முடிவிலும் அவர் உறுதியாக இருப்பதாக கூறுகிறார்கள்.

குறிப்பாக கோவை மாவட்டத்தில் திமுகவை கூண்டோடு கலைத்துவிட்டு புதிய நிர்வாகிகளை நியமிக்கும் முடிவில் ஸ்டாலின் இருப்பதாக சொல்கிறார்கள். இதே போல் சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, நாமக்கல், மதுரை, நெல்லை, தென்காசி போன்ற மாவட்டங்களின் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களும் மாற்றப்படுவார்கள் என்கிறார்கள். இதற்கான பணிகளை திமுக மேலிடம் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் ஸ்டாலின் அறிவாயலம் வந்த பிறகு இதற்கான அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.

click me!