இடைத்தேர்தல் நடைபெறும் 18 தொகுதிகளில் ரகசிய சர்வே..! உளவுத்துறை ரிப்போர்ட் எடப்பாடி ஹாப்பி..!

By Selva KathirFirst Published Apr 8, 2019, 9:32 AM IST
Highlights

இடைத்தேர்தல் நடைபெறும் 18 தொகுதிகளில் உளவுத்துறை நடத்திய ரகசிய சர்வேயின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி தற்போது மகிழ்ச்சியடைந்துள்ளார்.

இடைத்தேர்தல் நடைபெறும் 18 தொகுதிகளில் உளவுத்துறை நடத்திய ரகசிய சர்வேயின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி தற்போது மகிழ்ச்சியடைந்துள்ளார்.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன் காலியாக உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலை விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் தான் மிகவும் முக்கியமானது. காரணம் சட்டமன்ற இடைத் தேர்தலின் முடிவுகள் ஆட்சியையே மாற்றக் கூடிய அளவிற்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

18 தொகுதிகளில் குறைந்தது ஐந்து முதல் ஆறு தொகுதிகளில் வென்றாலே எடப்பாடி அரசு தப்பித்து விடும். ஆனால் இது மட்டும் நிகழ்ந்து விடக்கூடாது என்று மு.க. ஸ்டாலினும் டிடிவி தினகரன் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். இடைத் தேர்தலில் அதிமுகவை வீழ்த்துவதன் மூலம் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி விட வேண்டும் என்பதுதான் ஸ்டாலினின் முதல் திட்டமாக உள்ளது. இதேபோல் எடப்பாடி பழனிசாமி பழிவாங்க இடைத்தேர்தல் வெற்றி என்பது அவசியம் என்ற தினகரனும் செயல்பட்டு வருகிறார். 

எனவேதான் நாடாளுமன்றத் தேர்தலைவிட சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு தினகரன் மற்றும் டிடிவி அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். ஒரு நாடாளுமன்ற தொகுதியில் செலவுக்கு தேவைப்படும் தொகையை ஒரே ஒரு சட்டமன்றத் தொகுதியில் குறித்து திமுக மற்றும் தினகரன் கட்சியினர் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகின்றனர். இவர்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவிற்கு அதிமுக தரப்பிலும் பணம் தாராளமாக செலவிடப்படுகிறது. 

ஆனாலும் கூட இந்த 18 தொகுதி தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று உளவுத்துறை மூலமாக ஒரு ரகசிய சர்வே எடுக்கப்பட்டுள்ளது. இதில் அதிமுகவினரின் தேர்தல் பணிகள் மிகச் சிறப்பாக இருப்பதாகவும் கவனிக்க வேண்டியவர்கள் செம்மையாக கவனித்து வருவதால் 10 முதல் 12 தொகுதிகளில் அதிமுக எளிதாக வென்று விடும் என்று ரிப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். 

இந்த ரிப்போர்ட் கிடைத்த மகிழ்ச்சியில் தான் தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விறுவிறுப்பு காட்டி வருவதாக சொல்லப்படுகிறது. அதேசமயம் திமுகவும் சரி தினகரன் சரி இடைத் தேர்தலில் அதிமுகவை வீழ்த்த வேண்டும் என்று அடுத்தடுத்து புதிய விவேகத்துடன் செயல்பட்டு வருகின்றனர். இதனால் பெரிய அளவில் விளம்பரம் ஆகாவிட்டாலும் 18 தேர்தல் களம் தகித்து வருகிறது வருகிறது.

click me!