விவசாயிகளே நீங்க வாங்கிய கடன கட்டாதீங்க ! கொஞ்சம் பொறுங்க ! கார்த்தி சிதம்பரம் அதிரடி பேச்சு !!

Published : Apr 08, 2019, 09:04 AM IST
விவசாயிகளே நீங்க வாங்கிய கடன கட்டாதீங்க ! கொஞ்சம் பொறுங்க !  கார்த்தி சிதம்பரம் அதிரடி பேச்சு !!

சுருக்கம்

மத்தியிலே ஆட்சி மாறும்வரை விவசாயிகள் யாரும் கடன்களை செலுத்த வேண்டாம் என்று சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் அதிரடியாக பேசியுள்ளார்..

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார். புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் வாக்கு சேகரிக்கும் விதமாக கார்த்தி சிதம்பரம் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய கார்த்தி சிதம்பரம், “2008ஆம் ஆண்டில் அனைத்து விவசாயக் கடன்களையும் காங்கிரஸ் கட்சி ரத்து செய்தது. உங்கள் அனைவருக்கும் நினைவில் இருக்கிறதா? அனைத்து விவசாயக் கடன்களையும் நாங்கள் ரத்து செய்தோம் என தெரிவித்தார்..

மீண்டும், ஸ்டாலின் பெயரிலும், எங்கள் தலைவர் ராகுல் காந்தி பெயரிலும் சொல்கிறேன், காங்கிரஸ் கட்சி மத்தியிலே ஆட்சி அமைத்தவுடன் அனைத்து விவசாயக் கடன்களும் ஒட்டுமொத்தமாக ரத்து செய்யப்படும் என தெரிவித்தார்.

அதனால்தான் சொல்கிறேன், அடுத்த இரண்டு மாதங்களுக்கு யாரும் கடன்களை செலுத்திவிடாதீர்கள். அனைவரும் பொறுத்திருங்கள். மத்தியிலே ஆட்சிக்கு வந்தவுடன் எல்லா கடன்களையும் ரத்து செய்துவிடுவோம்” என்று கூறினார். 

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500.! புது ரூல்ஸ் வந்தாலும் இவங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்கும்.!
C.Vijayabaskar Join TVK: டெல்டாவே காலியாகிறது.! எடப்பாடிக்கு சவால்விட்ட விஜயபாஸ்கர்.! மாமல்லபுரத்தில் மாஸ் காட்டிய ஜெயலலிதா விசுவாசி.!