எடப்பாடி பழனிசாமி விவசாயி இல்லங்க !! அவர் ஒரு விஷ வாயு ! கிழித்து தொங்கவிட்ட ஸ்டாலின்!!

Published : Apr 05, 2019, 09:42 PM IST
எடப்பாடி பழனிசாமி விவசாயி இல்லங்க !! அவர் ஒரு விஷ வாயு ! கிழித்து தொங்கவிட்ட ஸ்டாலின்!!

சுருக்கம்

எட்டு வழிச்சாலைக்காக 354 ஏரிகள், 250 குளங்கள், 30 ஆயிரம் தென்னை மரங்கள்,  4000 ஆயிரம் கிணறுகள், 6500 ஆள்துளை கிணறுகள் போன்றவற்றை அழிக்க உத்தரவிட்ட  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு விவசாயியே இல்லை என்றும் அவர் ஒரு விஷ வாயு என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

கள்ளக்குறிச்சியில் திமுக வேட்பாளர் கௌதம் சிகாமணியை ஆதரித்து ஸ்டாலின் இன்று இரவு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது உரையாற்றிய அவர் மத்தியில் சர்வாதிகார மோடி ஆட்சியும், மாநிலத்திலே எடப்பாடி பழனிச்சாமியின் உதவாக்கரை ஆட்சியும் நடந்து வருகிறது. எனவே மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஒரு நிமிடத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி அகற்றப்படும் என்று தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  ச்லலும் இடமெல்லாம் தன்னை ஒரு விவசாயி என்று கூறி வருகிறார். ஆனால் எட்டு வழிச்சாலைக்காக 354 ஏரிகள், 250 குளங்கள், 30 ஆயிரம் தென்னை மரங்கள்,  4000 ஆயிரம் கிணறுகள், 6500 ஆள்துளை கிணறுகள் போன்றவற்றை அழிக்க உத்தரவிட்ட  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு விவசாயியே இல்லை என்றும் அவர் ஒரு விஷ வாயு என்றும் கடுமையாக குற்றம்சாட்டினார்.

ஒரு  விவசாயி நாட்டை ஆளலாம், ஸ்டாலினாகி நான் அதை மனப்பூர்வமான வரவேற்கிறேன், அதை ஆதரிக்கவும் செய்வேன். ஆனால் எடப்பாடி விவசாயியா? அவர் ஒரு விஷவாயு. விவசாயி என்று சொல்வதற்கு அவருக்கு அருகதை இல்லை என்று தெரிவித்தார்.

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் முயற்சியை தடுக்காதவர் தான் இந்த விவசாயி. விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை தடுக்க இவருக்கு தெம்பு இருக்கா, தைரியம் இருக்கிறதா? என அவர் கேள்வி எழுப்பினார்.

PREV
click me!

Recommended Stories

ஆபரேஷன் சிந்தூரின் முதல் நாளிலேயே பாகிஸ்தானிடம் அடி வாங்கியது இந்தியா..! காங்கிரஸ் தலைவர் சர்ச்சை பேச்சு..!
சமத்துவப் பாட்டன் பாரதி..! சாதிவெறி ஐயா ஈவேரா..! அதிர வைக்கும் நாம் தமிழர் கருத்தரங்கம் போஸ்டர்