ஆளுநர் அழைப்பு - கூவத்தூரிலிருந்து புறப்பட்டார் எடப்பாடி

 
Published : Feb 14, 2017, 04:03 PM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
ஆளுநர் அழைப்பு - கூவத்தூரிலிருந்து புறப்பட்டார் எடப்பாடி

சுருக்கம்

பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேரம் ஒதுக்கியுள்ளார். 

சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 10 கோடி ரூபாய் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் இன்று காலை 10. 30 மணிக்கு தீர்ப்பு வழங்கியது. 

இதையடுத்து அக்கட்சியின் பொதுச்செயலாளராக உள்ள சசிகலா 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. எனவே அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில்  எடப்பாடி பழனிச்சாமி ஆளுனரை சந்திக்க நேரம் கோரியிருந்தார். இதையடுத்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 12 பேருக்கு மாலை 5.30 மணிக்கு சந்திக்க நேரம் ஒதுக்கியுள்ளார். 

ஆளுநர் நேரம் ஒதுக்கியதையடுத்து அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூவத்தூரில் இருந்து சென்னை புறப்பட்டுள்ளார். அவருடன் மூத்த நிர்வாகிகளும் ஆளுநர் மாளிகைக்கு செல்கின்றனர். 

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!