
தமிழக அரசியலில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. கூவத்தூரில் கோல்டன் பே ரிசார்ட்டில் சசிகலா ஆதரவு எம்ல் ஏக்கள் தங்கி உள்ளனர். இந்நிலையில் இன்று சசிகலாவுக்கு எதிராக சொத்து குவிப்பு வழக்கில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதனை தொடர்ந்து, கூவத்தூரில் அசாதாரண சூழல் நிலவுவதால், தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
இன்று மலைக்குள் ஆஜர்
குற்றவாளி என அறிவிக்கப்பட்ட சசிகலா உள்ளிட்ட 3 பேர், இன்று மாலைக்குள் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளதால், தற்போது கூவத்தூரில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. காரணம் , சசிகலா தனது ஆதரவு எம் எல் ஏக்களுடன் கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டில் தங்கி உள்ளதே .
144 தடை உத்தரவு :
எந்த நேரத்திலும், கூவத்தூரில் தங்கியுள்ள சசிகலாவை கைது செய்ய போலீசார் அங்கு காத்திருக்கின்றனர். மேலும் பொதுமக்கள், தொண்டர்கள் , சசிகலா ஆதரவாளர்கள் அங்கு குவிந்திருப்பதால், எந்த விதமான அசாம்பா விதங்களும் நடைபெறமால் இருக்க , அங்கு 144 தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது