மதுரையிலிருந்து வந்த போன் கால்... ஒருமணி நேரத்தில் வந்து சேர்ந்த ஓபிஎஸ்!! கதையை முடித்து கடிதம் வெளியிட்ட எடப்பாடி...

By sathish kFirst Published Dec 20, 2018, 12:56 PM IST
Highlights

அண்ணன் - தம்பி உறவுக்கு இடமில்லை, ‘புகார் என்று வந்தவுடன், சொந்த தம்பி என்றும் பாராமல் கடும் நடவடிக்கை எடுத்து தன் நேர்மையை நிலைநாட்டியுள்ளார் பன்னீர்செல்வம்.  என அதிமுகவினர் மார்தட்டி சொல்லிவரும் இந்த மேட்டருக்கு பின்னால் நேற்று நடந்த அந்த சீக்ரெட் மீட்டிங் க்ளைமேக்ஸ்ஸில் மொத்த அட்டூழியத்திற்கு முடிவுகாட்டி விட்டார் எடப்பாடி.

மதுரை ஆவின் சேர்மனாக நேற்றுதான் அவசர அவசரமாக பொறுப்பேற்றார் ஓ.பன்னீர்செல்வத்தின் பாச தம்பி  ஓ.ராஜா.  பதவியேற்ற சில மணி நேரத்திலேயே  ஓ.ராஜாவை கட்சியிலிருந்தே நீக்கிய அறிவிப்பு வெளியானது. ராஜா மீது தொடர்ந்து பெருகி வரும் புகார்களால் கட்சிக்கும், துணை முதல்வரின் பதவிக்கும் அவப்பெயர் கூடிக் கொண்டே வந்ததன் காரணமாகவே,  பெரியகுளம் நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் ஓ.ராஜா அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக  அறிக்கை வெளியானது.

மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் ஓ.ராஜா. தலைவர் பதவிக்கான போட்டி என்பது பலமாக இருந்தது. போட்டியை நேரடியாகச் சமாளிக்காமல் சில குறுக்கு வழிகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் ஓ.ராஜா. இன்று நடந்த தேர்தலில் ஓ.ராஜா தேர்வு செய்யப்பட்டதும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட துளசி முதல்வரின் தனிச் செயலாளரான ஜெயஸ்ரீக்கு பேசியிருக்கிறார். அப்போது, ‘தேர்தலில் என்ன நடந்தது?   மொத்த ஆதாரத்தையும்     மெயில் அனுப்பியிருக்கேன். இதை முதல்வரிடம் உடனடியாகச் சொல்லுங்க. இல்லைன்னா  அப்படியே அந்த மெயிலை திமுக ஐடி விங்க்கு ஃபார்வர்ட்  பண்ணிடுவேன். அப்புறம்  என்னநடக்கும்ன்னு நீங்களே புரிஞ்சிக்கோங்க’ என்று சொல்லியிருக்கிறார். ஜெயஸ்ரீயும் உடனடியாக இந்தத் தகவல்களை முதல்வரிடம் சொல்லியிருக்கிறார். 

மெயிலில் வந்த மொத்த ஆதாரங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டு, துணை முதல்வர் பன்னீரை வரச் சொல்லியிருக்கிறார் எடப்பாடி. ‘ மொத்த ஆதாரத்தையும் காட்டிய பின்... இதுல சம்பந்தப்பட்டிருப்பது உங்க தம்பி என்பதால்தான் உங்ககிட்ட சொல்றேன். ஆதாரங்கள் எல்லாமே சரியாக இருக்கு. இதில் நாம சைலண்ட்டா இருந்தா, எதிர்கட்சியினர் சும்மா இருக்க மாட்டாங்க. நம்ம ஆட்சிக்கே உங்க தம்பியால மிகப்பெரிய நெருக்கடி வந்துடும். அதனால் அவர் மீது நடவடிக்கை எடுத்துதான் ஆகணும்...’ என்று சொல்லியிருக்கிறார்.

அதற்கு ஓபிஎஸ், ‘ எதுவானாலும் கூப்பிட்டு விசாரிப்போம், கூப்பிட்டு விசாரிப்போம் என்று சொன்னாராம். அதற்கு எடப்பாடியோ ,  ஆதாரங்கள் எல்லாமே சரியாக இருக்கு. விசாரிக்க வேண்டிய அவசியமே இல்லை.  இப்போ ஆக்ஷன் எடுக்கலன்னா ஆபத்து நமக்குத்தான் புரிஞ்சிக்கோங்க சொன்னாராம்.

விட்டுக்கொடுக்காத ஓபிஎஸ் எனக்குன்னு ஊர்ல ஒரு பேரு இருக்கு, அது என்னன்னு நானே விசாரிச்சிட்டு சொல்றேன்  என்று விட்டுக் கொடுக்காமல் பேசியிருக்கிறார். ஆனால் எடப்பாடி, நீங்க உங்க தம்பி என்பதற்காகப் பார்க்குறீங்க. ஆனால், அவரால நம்ம ஆட்சிக்கே ஆபத்து வரும். இப்போ அவரைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கணும்..’  என்று சொல்ல அதிர்ந்து போனாராம் ஓபிஎஸ்.

அதுமட்டுமல்ல பேசிக்கொண்டிருக்கும் போதே,  ஓ.ராஜாவைக் கட்சியிலிருந்து நீக்கும் கடிதத்தைத் தயார் செய்யச் சொல்லி அடுத்த அரை மணி நேரத்தில் ஓ.ராஜா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை கடிதத்தை காட்டி பன்னீரிடம் கையெழுத்து வாங்கிட்டாராம் எடப்பாடியார், கண் கலங்கிக்கொண்டே கையெழுத்துப் போட்ட   ஓபிஎஸ், ஒரு நிமிடம் கூட அங்கு நிற்காமல் சோகத்துடன் கிளம்பி சென்றாராம்.

click me!