செந்தில் பாலாஜி இணைப்பில் இப்படியொரு நாடகமா..? டி.டி.வி. தினகரனுடன் அசரடிக்கும் மு.க.ஸ்டாலின்!

By manimegalai aFirst Published Dec 20, 2018, 12:28 PM IST
Highlights

செந்தில் பாலாஜியை திமுக இழுத்துக் கொண்டாலும், அக்கட்சியை வெளிப்படையாக விமர்சிக்காமல் இருந்த டி.டி.வி.தினகரன், ஆளுங்கட்சியை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவது சந்தேகத்தை உறுதிசெய்கிறது.  

செந்தில் பாலாஜியை திமுக இழுத்துக் கொண்டாலும், அக்கட்சியை வெளிப்படையாக விமர்சிக்காமல் இருந்த டி.டி.வி.தினகரன், ஆளுங்கட்சியை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவது சந்தேகத்தை உறுதிசெய்கிறது.   

திமுகவில் இணைந்துவிட்ட செந்தில் பாலாஜி ஜரூராக கரூர் மாவட்டத்தில் கட்சிப் பணிகளில் களமாடத் தொடங்கிவிட்டார். அவரது விறுவிறு பணிகளால் திமுக சீனியர்களே மிரண்டு தண்ணீர் குடிக்கின்றனர். ஆனாலும் டி.டி.வி.தினகரன் மு.க.ஸ்டாலின் குறித்தோ, திமுக கட்சியைப் பற்றியோ விமர்சனம் செய்யவில்லை. மாறாக ஆளும் கட்சியை குற்றம் சொல்வதை அதிகரித்து விட்டார்.

 

இது எடப்பாடியை ஓரம்கட்ட ஸ்டாலினுடன் சேர்ந்து தினகரன் நடத்திய நாடகமாக இருக்கலாம் எனக் கூறுகிறார்கள். அதற்கான காரணத்தையும் அடுக்குகிறார்கள். மிகவும் நம்பிக்கைக்கு உரியவராக கருதப்பட்ட செந்தில் பாலாஜி திமுகவில் சேர்வதற்கு ஒரு நாளுக்கு முன்பே டி.டி.வி.தினகரன் அறிக்கை வெளியிட்டது பெரும் சந்தேகத்தை கிளப்பியது. அந்த அறிக்கையிலும் கூட் அவர் செந்தில் பாலாஜி பெயரையோ, அல்லது திமுக பற்றியோ கடுமையாக விமர்சனம் செய்யவில்லை. 

திமுகவில் இணைந்த பின் எங்கிருந்தாலும் வாழ்க என்கிற ரீதியில் மட்டுமே செந்தில் பாலாஜி இணைந்து குறித்து கருத்து தெரிவித்து இருந்தார் டி.டி.வி.தினகரன். அதேபோல் திமுகவில் இணைந்ததற்கு காரணம் என்ன எனக் கேட்டபோது, தினகரனைப் பற்றியோ, அமமுக குறித்தோ செந்தில் பாலாஜி வாய் திறக்கவேயில்லை. 

ஆகையால், செந்தில் பாலாஜி திமுகவில் இணைவது ஸ்டலினுடன் சேர்ந்து டி.டி.வி.தினகரன் நடத்தும் நாடகம் என்கிறார்கள். டி.டி.வி.தினகரனும்- மு.க.ஸ்டாலினும் மதுரையில் ஓட்டல் ஒன்றில் சந்தித்துப் பேசியதாக அதிமுக தரப்பில் இருந்து தகவல் வெளியானது. ஆனால், இதனை இரு தரப்பும் மறுக்கவில்லை. இந்த சந்திப்புக்குப் பிறகே அமமுக- திமுகவில் பல விஷயங்கள் முடிவு செய்யப்பட்டுள்ளனவாம்.

அதேபோல் சென்னை அடையாறில் உள்ள பிரம்ம ஞான சபை வளாகத்தில் அவ்வப்போது வாக்கிங் செல்வது வாடிக்கையாக வைத்துள்ளார் டி.டிவி.தினகரன். மு.க.ஸ்டாலினும் அவ்வப்போது அங்கு செல்வார். அப்போது இருவரும் ஆலோசனை நடத்தி வந்ததாகவும் கூறுகிறார்கள். 

செந்தில் பாலாஜியை களமிறக்குவதன் மூலம் அதிமுகவை அடக்கி விட்டு, தானே களத்தில் இருப்பதைப்போன்ற சூழலை உருவாக்க டி.டி.வி.தினகரன் முயற்சிக்கிறார். செந்தில் பாலாஜி செல்வது அந்த அடிப்படையில்தான். தினகரனோடு அவருக்கு என்ன பிரச்னை என்ற உண்மைத்தகவல், இதுவரை வெளியில் கசியவில்லை. இன்னொரு முக்கியமான விஷயத்தையும் கவனிக்க வேண்டும். தனது தொகுதிக்கான செலவயையும், சில மாவட்டங்களில் கட்சி செயல்படுவதற்கான செலவையும் தானே செந்தில் பாலாஜி ஏற்றுக்கொள்வதாக வாக்குறிதி அளித்துள்ளதும் சந்தேகத்தை கிளப்பி இருக்கிறது. ஆகவே இதில் மு.க.ஸ்டாலின் - தினகரன் நாடகம் இதில் அடங்கி இருக்கிறது எனக் கூறுகிறார்கள். 

click me!