ஆதாரம் எங்கே...! கண் முன் காட்டிய நெறியாளர்...! ஒரே வார்த்தையை சொல்லி மழுப்பிய பா.வளர்மதி...!

First Published Jan 21, 2018, 11:07 AM IST
Highlights
edappaadi palanichamy supporter valarmathi talk about sasikala


ஜெயலலிதா மறைவு

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் பல உச்சகட்ட குழப்பங்கள் நிலவியது. அப்போது முதலமைச்சராக பன்னீர்செல்வம் இருந்தார். 

சசிகலா பொறுப்பேற்பு

ஜெயலலிதா மறைவையடுத்து சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார். அப்போது அமைச்சர்களாகவும் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்தவர்களும் சசிகலாவை கும்பிட்டு நீங்கள் தான் இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் கட்சியை வழிநடத்த வேண்டும் என கோருவது போல வீடியோக்களும் புகைப்படங்களும் மீடியாக்கள் ஒளிபரப்பி வந்தன. 

இதைதொடர்ந்து சசிகலா முதலமைச்சர் பதவியை அடைய பன்னீர்செல்வத்தை வழுக்கட்டாயமாக பதவி விலக சொல்லியுள்ளார். அவரும் பதவி விலகிவிட்டு தர்ம யுத்தத்தை தொடங்கினார். 

சசிகலா சிறை

அவர் பதவி விலகினாலும் சசிகலாவுக்கு முதலமைச்சர் பதவி கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக சொத்துகுவிப்பு வழக்கில் சிறைதண்டனையே கிடைத்தது.

சசிகலா தரப்பில் இருந்த எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானார். அப்போது சசிகலா தரப்பில் இருந்த பா.வளர்மதி பன்னீர்செல்வத்தை வகை வகையாக வசைபாடினார். 

ஒபிஎஸ் - இபிஎஸ் இணைப்பு

இதையடுத்து சசிகலா தரப்பு ஓரங்கட்டப்பட்டு ஒபிஎஸ்சும் இபிஎஸ்சும் கைகோர்த்தனர். அப்போது எடப்பாடியிடம் தஞ்சம் அடைந்த பா.வளர்மதி ஒரு கூட்டத்தில் ஜெயலலிதாவின் ரத்தம் குடித்த காட்டேரிகள் என சசிகலா தரப்பை வசைபாடியதாக தெரிகிறது. 

அநாகரீக பேச்சு

இதுகுறித்து செய்தியாளர் ஒருவர் பா.வளர்மதியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு நான் அநாகரீகமாக பேசியதே இல்லை. ஆதாரம் இருக்கா என கேள்வி எழுப்பினார். 

உடனே அந்த செய்தியாளர் ஆதாரத்தை காட்ட முற்பட்டார். அதற்குள் அதை பார்க்காமலேயே இது என் குரல் அல்ல எனவும் அது நானே இல்லை எனவும் பா.வளர்மதி கத்த தொடங்கிவிட்டார். 

மீண்டும் சசிகலா குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் நீங்க வேற கேள்வி கேட்குறீங்களா என கூறி மழுப்பி விட்டார். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. 

இதனிடையே எடப்பாடி அரசு பா.வளர்மதிக்கு பெரியார் விருது வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது. 

click me!