இவர்தான் மு.க.ஸ்டாலினின் பினாமியாம்? திண்டுகல் சீனிவாசன் சொன்ன பரபரப்பு தகவல்...

Asianet News Tamil  
Published : Jan 21, 2018, 07:37 AM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
இவர்தான் மு.க.ஸ்டாலினின் பினாமியாம்? திண்டுகல் சீனிவாசன் சொன்ன பரபரப்பு தகவல்...

சுருக்கம்

Dinakaran is acting as Stalins proxy Minister blames

அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் 101வது பிறந்த முன்னிட்டு திண்டுக்கல் மணிக்கூண்டில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற வனத்துறை அமைச்சர் சீனிவாசன் பேசியதாவது;

ஜெயலலிதா மறைந்து ஒரு வருடம் ஆகிறது. ஒன்றரை வருடமாக நல்லமுறையில் மக்கள் பாராட்டும் வகையில் ஆட்சி செயல்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என ஸ்டாலின் பினாமியான தினகரன் கூறி வருகிறார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் பணம் கொடுத்து மக்களை ஏமாற்றி வாங்கிய எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.

நேற்று அப்பகுதியில் நன்றி சொல்ல போனபோது 20 ரூபாய் நோட்டு கொடுத்து 10ஆயிரம் ரூபாய் தருவதாக கூறி இன்னும் பணம் தரவில்லை என மக்கள் வெளிப்படையாகவே பேசி இருக்கிறார் அவரது ஆதரவாளரான ராஜசேகர். இது எப்படி இருக்கிறதுன்னா? திருவிழாவில் பிள்ளையை ஏமாற்றியது போல் நடந்திருக்கிற தேர்தல். இதனால் அப்பகுதியில் உள்ள வாக்காள மக்கள் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தக் கூட தயாராக உள்ளனர். 



எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்தியது தான் அ.தி.மு.க.வின் சாதனை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் இந்த விழாக்களில் மட்டும் 521 புதியதிட்டங்கள் 30 மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுவரை 3200 பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. 2329 முடிவடைந்த திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

தற்போது முத்தலாக் கட்சி பயணம், மானிய பயணம் ரத்து போன்ற பிரச்சனைகளை மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். தற்போது மத்திய அரசிடமிருந்து கேபிள் டிவி ஒளிபரப்புவதற்கான அனுமதி வாங்கியதின் மூலம் 13 லட்சம் செட்டப் பாக்ஸ் மக்களுக்காக வாங்கப்பட்டுள்ளது. இதற்காக மாதம் 125ரூபாய் கட்டணம் செலுத்தினால் போதும். அதற்கு அதிகமாக கட்டணம் கேட்டால் யாரும் கொடுக்க வேண்டாம் அப்படி கூடுதலாக கட்டணம்  கேட்டால் அந்தந்த பகுதிகளில் உள்ள இதற்கென்றே தனியாக நியமிக்கப்பட்டுள் கேபிள் டிவி தாசில்தாரிடம் புகார் கொடுங்கள். அதையும் மீறி மக்களிடம் கூடுதலாக பணம் வசூலிக்கிறார்கள் என்றால் அவர்களுடைய உரிமையை ரத்து செய்யப்படும். 

PREV
click me!

Recommended Stories

நாடாளுமன்றம் சென்ற பி.டி.உஷா.. கணவர் அதிர்ச்சி மரணம்..! வீட்டில் நடந்தது என்ன.?
இப்ப தேர்தல் நடந்தாலும் திமுகவுக்கு தான் வெற்றி..! விஜய், அதிமுக தலையில் இடியை இறக்கிய சர்வே முடிவு