
உலகின் தலை சிறந்த சொல் ‘செயல்’தான். ஆனால் செயலுக்கு இணையாக ‘சொல்’ல்லுக்கும் வலுவான விளைவுகள் உண்டு. அதிலும் அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்களின் சொல்லும் ஏகோபித்த பின் விளைவுகள் அநேகம் உள்ளன. அதை டீல் செய்யும் பகுதிதான் இது...
* இன்றைக்கு ஆட்சியில் இருப்பவர்கள் பதவிக்காக தங்களின் சுயமரியாதையை மட்டுமல்ல, தமிழகத்தின் சுயமரியாதையையும் அடமானம் வைத்துவிட்டனர்.
- ஸ்டாலின்
* காங்கிரஸ் கட்சியில் இருந்து என்னை சஸ்பெண்ட் செய்துள்ளனர். எந்தளவுக்கு என்னை காங்கிரஸிலிருந்து விலக்கி வைக்கின்றனரோ அந்தளவுக்கு நான் காங்கிரஸோடு ஒட்டியே இருக்கிறேன். நான் உண்மையான காங்கிரஸ்காரன்.
- மணிசங்கர் ஐயர்
* ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் 29 வகையான கைவினைப் பொருட்களுக்கான வரியை மொத்தமாக நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- அருண் ஜெட்லி
* ரஜினி மற்றும் கமல் இருவரும் எப்படி அரசியல் பயணம் செய்தாலும் பரவாயில்லை. ஆனால் எங்களின் பயணம் மக்களை நோக்கித்தான் இருக்கும். அதுதான் சேவை அரசியல்.
- ஜெயக்குமார்
* ஜெயலலிதாவின் மரணம் குறித்த கருத்துக்களை வெளியிடுவது மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் இதை ஆராய்ந்து ஜெ., மரணம் குறித்த உண்மைகளை தெரிவிக்க வேண்டும்.
- திருநாவுக்கரசர்.
* நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன். என்னை இந்த முடிவுக்கு தள்ளியவர்களுக்கு நன்றி. அடுத்த சட்டசபை தேர்தலில் பெரிய மாற்றங்கள் இருக்கும்.
- விஷால்
* மத்தியில் பா.ஜ.க. அரசு அமைந்த பிறகு மாநிலங்களின் உரிமை பறிபோய்க் கொண்டிருக்கிறது. டில்லி, புதுவையில் இரட்டை நிர்வாக குழப்பங்களை நிகழ்த்துவது போல் தமிழகத்திலும் இதே வேலையை காட்டுகின்றனர்.
- தமீமுன் அன்சாரி
* தி.மு.க. கடவுள் மறுப்பு கொள்கையை கொண்ட கட்சி அல்ல. கடவுள் ஒருவரே என்பதுதான் எங்களது கொள்கை.
- கனிமொழி
* என் பெற்றோர் சிறு வயதிலிருந்தே என்னை நேர்மையாக வளர்த்துவிட்டனர். ஆனால் இந்த இரண்டரை ஆண்டு ஆட்சியில் என்னால் நேர்மையாக செயல்பட முடியவில்லை. எனவே அரசியலில் இருந்து ஒதுங்கி மீண்டும் சினிமாவில் தீவிரமாக கவனம் செலுத்த போகிறேன்.
- கருணாஸ்.
* மருத்துவ மேற்படிப்புக்காக டில்லி செல்லும் தமிழக மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதுவரை இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும்.
- வைகோ