‘பிச்சைக்காரனே 1 ரூபாய் போட்டால் வாங்க மாட்டேங்குறான்..." தில் ராஜூ கூல் பதில்...

 
Published : Jan 20, 2018, 07:53 PM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
‘பிச்சைக்காரனே 1 ரூபாய் போட்டால் வாங்க மாட்டேங்குறான்..." தில் ராஜூ கூல் பதில்...

சுருக்கம்

sellur Raju Cool answer on Bus fare hiked

தமிழகத்தில்  பேருந்து கட்டண உயர்வு பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில்  கட்டண உயர்வு குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருக்கும் கருத்தால் மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

வைகை ஆற்றில் நீர் ஆவியாவதை தடுக்க தெர்மாக்கோல் திட்டத்தை அறிமுகப்படுத்தி பல்பு வாங்கிய பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூவின் ஒவ்வொரு நடவடிக்கையும் உற்று நோக்குகிறார்கள் வலைதளவாசிகள்.

பொதுமக்கள், சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்ப்பது ஒரு பக்கம் இருந்தாலும், அரசியல்வாதிகளும் செல்லூர் ராஜூவை தெர்மாக்கோல் தெர்மாக்கோல் என கலாய்க்கும் அளவுக்கு அமைச்சர்களில் மிகப் பிரபலமானவர்.

இந்நிலையில், அவர் இன்று செய்தியாளர்களை சந்திப்பில் பேசிய அவர் ‘பிச்சைக்காரங்களே ஒரு ரூபாய்க்கு குறைவா போட்டால் வாங்க மாட்டேங்குறாங்க... அஞ்சு ரூபாய்க்குக்கூட இன்னிக்கு மதிப்பே இல்லை. அதனால பேருந்துக் கட்டண உயர்வு என்பதெல்லாம் ஒரு சுமையே இல்லை...’ எனச் சொல்லி வைக்க, அதற்கும் எதிர்ப்பு கிளம்பியது. என பேசினார். செல்லூர் ராஜுவின் இந்த கருத்துக்கு மக்கள் மத்தியில் எரிச்சலை உண்டாக்கியுள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!