மீண்டும் கண்முழிக்கும் ஸ்பெக்டரம் பூதம்: சி.பி.ஐ.யின் வேகத்தால் கிலியாகும் தி.மு.க.

 
Published : Jan 20, 2018, 06:18 PM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
மீண்டும்  கண்முழிக்கும் ஸ்பெக்டரம் பூதம்: சி.பி.ஐ.யின் வேகத்தால் கிலியாகும் தி.மு.க.

சுருக்கம்

cbi action in 2g spectrum case

ஸ்பெக்ட்ரம் வழக்கில் ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலையானதை கோலாகலமாக கொண்டாடிக் கொண்டிருக்கிறது தி.மு.க. ஆனால் இப்போது இதற்கு செக் வைக்கும் பணிகளில் இறங்கியிருக்கிறது சி.பி.ஐ. 

ஸ்பெக்ட்ரம் வழக்கில் ராசா அண்ட்கோ இப்படி ஒட்டுமொத்தமாக விடுதலையாகும் என்று சி.பி.ஐ. கனவு கூட கண்டிருக்காது. இந்த மெகா பாசிடீவ் தீர்ப்பு தி.மு.க.வை குஷியாக்கியிருக்கும் நிலையில் சி.பி.ஐ. மேல் முறையீட்டுக்கான பணிகளை துவக்கிவிட்டது. இந்த தீர்ப்பானது பி.ஜே.பி.க்கும் தமிழகத்தில் அரசியல் ரீதியாக பெரிய அளவில் பின்னடைவை சந்திக்க வைத்துவிட்டது. தி.மு.க.வை விமர்சிக்க கூட வழியில்லாமல் போனதாக பி.ஜே.பி.யினர் புலம்பித் தவிக்கின்றனர். 

இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில், ஸ்பெக்டரம் வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்கான அத்தனை ஆவனங்களையும் மளமளவென தயாரித்து வருகிறதாம் சி.பி.ஐ. இந்த மனு வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் தாக்கல் ஆகலாம் என்கிறார்கள். ஒரே மாதத்தில் விசாரணைகளை முடித்து, மார்ச்சில் தீர்ப்பை பெற்றுவிட வேண்டும் என்பதில் மிக முனைப்பாக இருக்கிறதாம் சி.பி.ஐ. 

ஏக குஷியிலிருந்த தி.மு.க.வுக்கு, சி.பி.ஐ.யின் இந்த தீடிர் ஜெட் வேகம் பெரும் அதிர்ச்சியையும், சந்தேகத்தையும் ஒரு சேர கிளப்பியிருக்கிறது. அரசியல் ரீதியாக மேல் முறையீடு விசாரணையும், தீர்ப்பும் அமைந்துவிடுமோ என்று இப்போதே அஞ்ச துவங்கிவிட்டது தி.மு.க. 

இந்நிலையில் ஸ்பெக்டரம் வழக்கு, தன் மீதான குற்றச்சாட்டுகள், வழக்கின் போக்கு ஆகியவற்றை வைத்து ஆ.ராசா எழுதியிருக்கும் புத்தகத்தில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். 
கவனிப்போம்!

PREV
click me!

Recommended Stories

எல்லாரும் அதிமுககாரன் கிடையாது... கட்சியில் இருப்பேன்டானு சொல்றவன்தான் ரோஷமானவன்..! செங்கோட்டையன் மீது செல்லூர் ராஜூ ஆவேசம்..!
நாஞ்சில் சம்பத்தை குஷி படுத்திய விஜய்.. முக்கிய பொறுப்பு வழங்கி கௌரவிப்பு..!