தமிழகத்தில் ஜனநாயகம் செத்துவிட்டது… திமுக அரசு மீது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!!

Published : Apr 13, 2023, 11:29 PM IST
 தமிழகத்தில் ஜனநாயகம் செத்துவிட்டது… திமுக அரசு மீது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!!

சுருக்கம்

தான் சட்டப்பேரவையில் பேசுவதை நீக்கிவிடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார். 

தான் சட்டப்பேரவையில் பேசுவதை நீக்கிவிடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணாமலை வெளியிட உள்ள ஊழல் பட்டியல் குறித்து அவருக்கு தான் தெரியும். திமுக ஆட்சிக்கு பிறகு சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு விட்டது. நாங்கள் அரசுக்கு எதிராக நடைபெறும் சம்பவங்களை சட்டமன்றத்தில் எடுத்து வைப்பதை நீக்கி விடுகிறார்கள். முன்பு பேசியது இருக்கிறது பின்பு பேசியது இருக்கிறது.

இதையும் படிங்க: அண்ணாமலை மீது அடுக்கடுக்கான புகார் கூறி அலறவிட்ட நிர்வாகி.. பாஜக எடுத்த அதிரடி முடிவு..!

நான் பேசுவதை எடிட் செய்துவிட்டால் எப்படி உங்களுக்கு தெரியும். பிரதான எதிர்கட்சி தலைவர் பேசுவதை நீக்கிவிடுகிறார்கள். இதில் ஜனநாயகத்திற்கு எங்கு இடம் இருக்கிறது. மின்துறை அமைச்சர் மின்வெட்டு இல்லை என்கிறாரே. எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லம் மின்வெட்டு ஏற்படும். கொரோனோ முன்னெச்சரிக்கையாக திமுக அரசு நடவடிக்கைகளே எடுக்கவில்லை.

இதையும் படிங்க: திரு அமித்ஷா என தான் பேசியுள்ளார்… சட்டப்பேரவையில் உதயநிதிக்கு ஆதரவாக பேசிய மு.க.ஸ்டாலின்!!

ஒருவரே தமிழகம் முழுவதும் உள்ள பார்களை எடுத்துள்ளார். 24 மணி நேரமும் பார்கள் திறந்துள்ளது. மதுபான கடைகள் அதிகமாக உள்ளது. அதனை யார் எடுத்தார்கள் என தெரியும். மின்துறை அமைச்சர் எதுவும் நடக்கவில்லை என பேசுகிறார். 24 மணி நேரமும் பார் கடைகள் திறந்து உள்ளது. தமிழகத்தில் ஜனநாயகம் செத்துவிட்டது. பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. போதை பொருள் விற்பனை அதிகரிந்துள்ளது என்று தெரிவித்துள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி