திரு அமித்ஷா என தான் பேசியுள்ளார்… சட்டப்பேரவையில் உதயநிதிக்கு ஆதரவாக பேசிய மு.க.ஸ்டாலின்!!

By Narendran S  |  First Published Apr 13, 2023, 5:55 PM IST

அமித்ஷா பெயரை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என பாஜக எம்.எல்.ஏவின் கோரிக்கைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார். 


அமித்ஷா பெயரை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என பாஜக எம்.எல்.ஏவின் கோரிக்கைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார். முன்னதாக தமிழக சட்டப்பேரவையில் விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஐபிஎல் போட்டியைக் காண பாஸ் வழங்க வேண்டும் என என்று கோரிக்கை வைத்தார்.

இதையும் படிங்க: அமித்ஷா பெயரை கூறியது ஏன்.? மகன் என்பதால் உதயநிதி செய்த தவறை ஸ்டாலின் நியாயப்படுத்த கூடாது.! பாஜக ஆவேசம்

Tap to resize

Latest Videos

அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஐபிஎல் போட்டிகளை நடத்துவது உங்களின் நெருங்கிய நண்பரான அமித்ஷாவின் பையன் ஜெய்ஷாதான் என்றார். மேலும் நீங்கள் அவரிடம் பேசி ஒரு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஐந்து டிக்கெட் வாங்கிகொடுங்கள், நாங்கள் காசு கொடுத்துக் கூட வாங்கிக் கொள்கிறோம் என்று தெரிவித்தார். இந்த நிலையில் இன்று சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் பேசிய பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், ஐபிஎல் டிக்கெட் குறித்து அமைச்சர் உதயநிதி பேசும் போது ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பெயர் இடம் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: எந்த காலத்திலும் கட்சி வளராது.. பணம் இருப்பவர்களுக்கே பொறுப்பு.. அண்ணாமலை மீது பகீர் புகார் கூறிவிட்டு விலகல்

அதை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அதை ஏன் நீக்க வேண்டும். அதில் என்ன தவறு உள்ளது. திரு அமித்ஷா என தான் பேசியுள்ளார். அது என்ன தகாத வார்த்தையா? தவறு இருந்தால் நானே நீக்க சொல்வேன் என்றார். இதை அடுத்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

click me!