அண்ணாமலை மீது அடுக்கடுக்கான புகார் கூறி அலறவிட்ட நிர்வாகி.. பாஜக எடுத்த அதிரடி முடிவு..!

By vinoth kumarFirst Published Apr 13, 2023, 3:16 PM IST
Highlights

நிர்மல் குமார் உள்ளிட்ட முக்கிய பாஜக பிரமுகர் அண்ணாமலை மீது விமர்சனங்களை முன்வைத்து அடுத்தடுத்து விலகி அதிமுக மற்றும் திமுகவில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில், இன்று மாநில பொருளாதார பிரிவு செயலாளர் கிருஷ்ண பிரபு அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டு முன்வைத்து கட்சியில் விலகியுள்ளார். 

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்து அக்கட்சியில் விலகுவதாக மாநில பொருளாதார பிரிவு செயலாளர் கிருஷ்ண பிரபு கூறியிருந்த நிலையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

தமிழக பாஜகவில் கடந்த சில நாட்களாக என்ன நடக்கிறது என்று தெரியாமல் அக்கட்சி தொண்டர்கள் குழம்பி போய் உள்ளனர். நிர்மல் குமார் உள்ளிட்ட முக்கிய பாஜக பிரமுகர் அண்ணாமலை மீது விமர்சனங்களை முன்வைத்து அடுத்தடுத்து விலகி அதிமுக மற்றும் திமுகவில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில், இன்று மாநில பொருளாதார பிரிவு செயலாளர் கிருஷ்ண பிரபு அண்ணாமலை மீது பல்வேறு குற்றச்சாட்டு முன்வைத்து கட்சியில் விலகியுள்ளார். 

Latest Videos

அதில், குறிப்பாக தேவையில்லாத விஷயங்களுக்கு பணம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும், அண்ணாமலை பாகுபாடுடன் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், ஆருத்ரா போன்ற மோசடி ஈடுபட்ட நபர்கள் மாநில தலைமைக்கு நெருக்கமாக இருப்பதாகவும் இதை தலைமை கண்டும் காணாமல் இருப்பதாக தெரிவித்தார். இந்நிலையில்,  கட்சிக்கு அவப்பெயர் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட கிருஷ்ண பிரபுவுடன் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக மதுரை மாநகர் பாஜக மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- பாரதிய ஜனதா கட்சியின் பொருளாதாரப் பிரிவு முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் கிருஷ்ணப்பிரபு அவர்கள் கட்சிக்கு அவப்பெயர் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் மதுரை மாநகர் பாரதிய ஜனதா கட்சி எந்த ஒரு பொறுப்பில் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவரிடம் கட்சி நிர்வாகிகள் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என்பதை கேட்டுக்கொள்கிறோம் என மகா சுசீந்திரன் தெரிவித்துள்ளார். 

click me!