டிவிட்டர் பயோவை மாற்றிய ஈபிஎஸ்... என்ன மாற்றியுள்ளார் தெரியுமா?

By Narendran SFirst Published Mar 28, 2023, 9:59 PM IST
Highlights

அதிமுக அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து எடப்பாடி பழனிசாமி தனது டிவிட்டர் பயோவில் அதிமுக பொதுச் செயலாளர் என மாற்றியுள்ளார். 

அதிமுக அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து எடப்பாடி பழனிசாமி தனது டிவிட்டர் பயோவில் அதிமுக பொதுச் செயலாளர் என மாற்றியுள்ளார். அதிமுகவில் ஒற்றை தலைமையில் ஆரம்பமான பிரச்சனை ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே மோதல் போக்கை ஏற்படுத்தியது. பின்னர் பல்வேறு பிரச்சனைகள் இருந்த வந்த நிலையில் பொதுக்குழு கூட்டம் பிரச்சனை நீதிமன்றம் வரை சென்றது. அங்கு தீர்ப்பு எடப்பாடிக்கு சாதகமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தது. அதில், பொதுக்குழு செல்லும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து கடந்த 17 ஆம் தேதி, அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: அன்று சசிகலா இன்று எடப்பாடி பழனிசாமி; முடிவை நோக்கி... கே.சி.பழனிசாமி சூசகம்!!

இந்தத் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி பிரபாகர் ஆகியோர் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளில் முதலில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தலாம். ஆனால், முடிவு அறிவிக்கக் கூடாது என் உத்தரவிடப்பட்டது. பின்னர் இந்த வழக்கு கடந்த 22ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

இதையும் படிங்க: எம்ஜிஆர், ஜெயலலிதா போல் இதை செய்ய துணிந்து முன்வர வேண்டும்... எடப்பாடிக்கு திருமாவளவன் அட்வைஸ்!!

இந்த நிலையில் இன்று வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், கடந்த ஆண்டு பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற வழக்கையும், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கையும் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் தேர்தல் முடிவை அறிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், அதிமுக தேர்தல் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக அறிவித்தனர். இதனிடையே எடப்பாடி பழனிசாமி தனது டிவிட்டர் பயோவில் அதிமுக பொதுச் செயலாளர் என மாற்றியுள்ளார்.

click me!