
அதிமுக ஆட்சியை எப்படியாவது கவிழ்த்துவிட்டு தான் முதலமைச்சராக வேண்டும் என்ற திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் முயற்சி தோல்வி அடைந்ததால் விரக்தி அடைந்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அத்திக்கடவு அவிநாசி திட்டம் விரைவில் தொடங்கப்படும் என தெரிவித்தார்.
வணிகர்கள் பாதிக்கப்படாத வகையில் ஜிஎஸ்டி வரியை கொண்டுவர மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று தெரிவித்தார்.
விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்ந்து படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது என்றும் அவர்களுக்கு அணைகள், குளங்கள் மற்றும் ஏரிகளில் வண்டல் மண் அள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தமிழகத்தில் அதிமுக ஆட்சியை கவிழ்க்க ஸ்டாலின் மேற்கொண்ட முயற்சிகள் பலிக்கவில்லை என்றும், அது தோல்வி அடைந்ததால் விரக்தியில் பேசி வருவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.