"OK " ஆனது எடப்பாடியின் "மாஸ்டர் பிளான்"...! இனி ஆட்சியை யாரும் அசைக்க முடியாது..!

 
Published : Sep 18, 2017, 12:47 PM ISTUpdated : Sep 19, 2018, 01:11 AM IST
"OK " ஆனது எடப்பாடியின் "மாஸ்டர் பிளான்"...!  இனி ஆட்சியை யாரும் அசைக்க முடியாது..!

சுருக்கம்

edapadi palanisaamis plan succeed

எடப்பாடியின் திட்டம்!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 உறுப்பினர்களில், முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவின்  மறைவிற்கு  பின், 233 ஆக உள்ளது. இந்நிலையில் தினகரன்  ஆதரவு எம்எல்ஏக்கள்  அதிரடியாக  தகுதிநீக்க்கம்  செய்யப்பட்டுள்ளது பெரும் பதற்றத்தை கிளப்பியுள்ளது

எம்எல் ஏக்கள்

மொத்தம்  - 234

ஜெயலலிதா மறைவுவிற்கு பின்,  234 - 1 = 233

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள்  தகுதி நீக்கம்  செய்த பின், 233-18 = 215

தற்போது  மொத்தமுள்ள எம்எல்ஏக்கள்  - 215

ஆட்சியை தாக்குபிடிக்க தேவையான எம்எல்ஏக்கள்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட  தினகரன்  ஆதரவு  எம்எல்ஏக்கள் தவிர்த்து, மீதமுள்ள எம்எல்ஏக்களின்  எண்ணிக்கையான 215  எம்எல்ஏக்களில்,பாதிக்கும் அதிகமான எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெற்றால், ஆட்சிக்கு பெரும்பான்மை இருப்பது  உறுதியாகிவிடும். இன்னும் சொல்லப்போனால்  எடப்பாடி  அரசு  தொடர்வதற்கு, நம்பிக்கை  வாக்கெடுப்பு நடத்தினால், 108 எம்எல்ஏக்கள் ஆதரவு பெற்றாலே போதுமானது என்பது  குறிப்பிடத்தக்கது.

எடப்பாடிக்கு ஆதரவு எம்எல்ஏக்கள் - 111

சமீபத்தில் நடைபெற்ற எடப்பாடி தலைமையிலான அதிமுக பொதுக்கூட்டத்தில், எடப்பாடிக்கு  ஆதரவாக 111 எம்எல்ஏக்கள் ஆதரவு  தெரிவித்தனர்.இந்நிலையில், தினகரன் ஆதரவு எம்எல் ஏக்களை தகுதி நீக்கம் செய்ததால், பெரும்பான்மை நிரூபிக்க தேவையான  எம்எல்ஏக்களின்  எண்ணிக்கை  குறைந்து விட்டது. அதாவது  எடப்பாடி ஆதரவு எம்எல்ஏக்கள் - 111  பேர் இருக்கும் போது, தற்போது  நம்பிக்கை  வாக்கெடுப்பு எடுத்தாலும், எடப்பாடி  அரசு  நிரூபிக்க  தேவையான எம்எல்ஏக்கள் 108  இருந்தாலே போதும் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுகவிற்கு எடப்பாடி விதித்த வலை

இதற்கு முன்னதாக,  எடப்பாடி அரசு  திமுக  எம்எல்ஏக்கள்  மீது  குறி வைத்தது. அதாவது சட்டபேரவைக்கு தடை செய்யப்பட்ட  குட்காவை  எடுத்து சென்றது  தொடர்பாக  ஸ்டாலின் உட்பட 21  எம்எல்ஏக்கள்  மீது  உரிமை  குழு நோடீஸ் அனுப்பியது. திமுகவின்  21  எம்எல்ஏக்களும்  இது  குறித்து  பதிலளிக்க வேண்டும் என  கூறப்பட்டருந்தது.

இது தொடர்பான  வழக்கு  உயர்நீதிமன்றத்தில்  நிலுவையில் உள்ளதால்,  திமுகவின்  மீது எடப்பாடி  வைத்த குறி தப்பியது. இதன் காரணமாக  அடுத்து என்ன  செய்ய  முடியும் என  தீவிர  யோசனை  செய்த  எடப்பாடி,  கடைசியில்  உட்கட்சியிலேயே  கை வைத்தார். அதனுடைய  விளைவு தான், இன்று  தினகரன் ஆதரவு எம் எல் ஏக்கள்  18  பேரை  தகுதி  நீக்கம் செய்தது  என்பது  குறிப்பிடத்தக்கது

சொல்லப்போனால், இனி ஆட்சியை கலைக்க முடியுமா என்றால், முடியாது என்ற  நிலை  உருவாகியுள்ளது.

 

 

 

 

 

PREV
click me!

Recommended Stories

அமித்ஷா ஆர்டர்.. இபிஎஸ் வீட்டுக்கு சென்ற நயினார்.. கூடுதல் சீட், ஓபிஎஸ்ஸை சேர்க்க நெருக்கடி?
நிலவு போல தான் விஜய்..! விரைவில் மறைந்து போவார்..! திமுகவில் இணைந்த EX மேலாளர் பி.டி.செல்வகுமார் ஆவேசம்..!