
எடப்பாடி பழனிசாமி காவிரி புஷ்கரத்தில் நீராடி, குளத்திற்கு பாவத்தை ஏற்படுத்தி உள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மயிலாடுதுரை சென்றார். அங்கு காவிரி மகா புஷ்கர விழாவில் கலந்து கொண்டு புனித நீராடினார்.
இது குறித்து கருத்து தெரிவித்த திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி நீரில் மூழ்கி குளத்திற்கு பாவத்தை ஏற்படுத்தியுள்ளார் என்று கூறியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது, மெஜாரிட்டி நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்ற வழக்கில் நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகுதான் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்.
தான் செய்த பாவத்தை நீக்குவதாக நினைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குளத்தில் மூழ்கினார். ஆனால், அவர் நீரில் மூழ்கி குளத்திற்கு பாவத்தை ஏற்படுத்தியுள்ளார் என்று ஸ்டாலின் கூறினார்.
நேற்று டிடிவி தினகரன் இது குறித்து பேசுகையில், நம்ப வைத்து துரோகமிழைத்தவர்கள் எந்த நதியில் மூழ்கினாலும் பாவம் போகாது என்று கூறியிருந்தார்.