எடப்பாடியை எரிச்சல்படுத்திய சிவகார்த்திகேயன்!: வழிகாட்டியது மத்திய அமைச்சராம்.

By thenmozhi gFirst Published Nov 16, 2018, 3:59 PM IST
Highlights

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நெல்  ஜெயராமனின் மருத்துவ செலவுகளை தானே எற்பதாக நடிகர் சிவகார்த்திகேயன் அவரை அறிவித்தது, மருத்துவமனைக்கு சென்று பார்த்தது...இவையெல்லாம் முதல்வர் எடப்பாடியாருக்கு ஒருவித எரிச்சலை தந்துள்ளதாம். 

       புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நெல்  ஜெயராமனின் மருத்துவ செலவுகளை தானே எற்பதாக நடிகர் சிவகார்த்திகேயன் அவரை அறிவித்தது, மருத்துவமனைக்கு சென்று பார்த்தது...இவையெல்லாம் முதல்வர் எடப்பாடியாருக்கு ஒருவித எரிச்சலை தந்துள்ளதாம். அதனாலேயே அமைச்சர்களை அனுப்பி அவரை சந்தித்து ஆறுதல் கூற வைத்ததோடு, பல விதமான உதவிகள் செய்வதாகவும் உறுதிமொழி தரப்பட்டதாம். 

*    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் தங்கள் ஆதரவாளரை நிறுத்திட அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி - உதயகுமார் இருவருக்குள்ளும் செம்ம போட்டி. சமீபத்தில் சாத்தூரில், கறிவிருந்துடன் நடந்த ஆலோசனை கூட்டத்தின் போது இருவரும்  எதிரும் புதிருமாகவே நடந்து கொண்டார்களாம். 

*    முதல்வரின் அந்த அதிரடி உத்தரவு, அவரது கட்சி நிர்வாகிகளுக்கு செம்ம ஷாக்கை தந்திருக்கிறது. அது...சத்துணவு பணியாளர்கள் நியமன விவகாரம்தான். இந்த பணி நியமனத்துக்கு தமிழகம் முழுவதும் செம்ம ஜோராக வசூல் வேட்டை நடந்ததால், போஸ்டிங் போடுவதற்கு பிரேக் போட்டுவிட்டாராம் முதல்வர். இதனால் நொந்து நிற்கிறார்களாம் கீழ் நிலை நிர்வாகிகள். 

*    சமீப காலமாக தேர்தல் என்றாலே பெரும் செலவு ஆகுமென்பது உறுதியாகிவிட்டது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் செலவுகளை எதிர்கொள்வதற்காக காங்கிரஸ் கட்சி நிதி வசூலில் இறங்குகிறதாம். இதுவரையில் இப்படியொரு மெகா வசூலில் அவர்கள் ஈடுபட்டதில்லை, இதுவே முதல் முறை என்றும் அரசியல் வட்டாரத்தில் ஆச்சரிய அலை அடிக்கிறது. 

*    ’பி.ஜே.பி. ஆபத்தான கட்சியா?’ எனும் கேள்வி விவகாரத்தில் ரஜினி முதலில் ஒரு கோணத்தில் பதில் தந்துவிட்டு, அதற்கு அடுத்த நாள்  வேறு கோணத்தில் பதிலை மாற்றி தருவதற்கு பி.ஜே.பி.யின் தலைமையிலிருந்து வந்த சில போன் கால்களே காரணம் என்கிறார்கள். மூத்த மற்றும் முக்கிய அமைச்சரின் வழிகாட்டுதல் இதில் ரஜினிக்கு இருந்ததாம்.

click me!