
எடப்பாடி பழனிசாமி
எப்படியும் ஆட்சியை பிடித்தே தீருவேன் என உறுதியாக இருந்த சசிகலா, உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி , தற்போது சிறையில் உள்ளார்.அதனை தொடர்ந்து , தற்போது எடப்பாடி பழனி சாமியை சட்டமன்ற தலைவராக தேர்வு செய்தார். அதன் பிறகு இருமுறை ஆளுனரை சந்தித்து , ஆட்சி அமைக்க உரிமை கோரிய கடிதம் கொடுத்தார்.
கோரிக்கை ஏற்பு :
எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று தற்போது தமிழக முதல்வராக நியமித்து உத்தரவு பிறப்பித்து உள்ளார் ஆளுநர் . இந்நிலையில், இன்று மாலை 4.3௦ எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்க உள்ளார் .
ஜெ நினைவிடத்தில் அஞ்சலி
இன்று மாலை முதல்வராக பதவி ஏற்க உள்ள எடப்பாடி பழனிசாமி, தான் பதவி ஏற்றவுடன், நேராக ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது