இலங்கை கதி இந்தியாவுக்கு வரக்கூடாது.. சிவ பெருமான், அல்லா, அல்லேலூயாவை கெஞ்சுகிறேன்.. கதறிய அழுத TR.

Published : Apr 25, 2022, 01:00 PM ISTUpdated : Apr 25, 2022, 01:08 PM IST
இலங்கை கதி இந்தியாவுக்கு வரக்கூடாது.. சிவ பெருமான், அல்லா, அல்லேலூயாவை கெஞ்சுகிறேன்.. கதறிய அழுத TR.

சுருக்கம்

தமிழகத்தில் அன்று யாரும் குரல் கொடுக்கவில்லை, கலைஞர் கொடுத்து பதவியை ஈழத்தமிழர்களுக்காக தூக்கி எறிந்தவன் நான், நான் ஆன்மீகவாதியா அரசியல்வாதியா?  தற்போது அரசியலில் உள்ளவர்கள் தமிழ் தமிழ் என்று சொல்பவர்கள் இலங்கைத் தமிழர்களுக்கு என்ன செய்தார்கள். எது எப்படியோ இந்தியாவிற்கு இலங்கையில் நிலைமை வந்துவிடக்கூடாது என்று மத்திய அரசுக்கு நான் கோரிக்கை வைக்க இருக்கிறேன். 

இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இந்தியாவுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என எல்லாம் வல்ல சிவபெருமான், அல்லா, அல்லேலூயாவை மன்றாடி வேண்டுவதாக திரைப்பட நடிகர், இயக்குனர் டி. ராஜேந்தர் கண்ணீர் வடித்துள்ளார். இலங்கையின் நிலையை மேற்கோள்காட்டி நாங்க வாழணுமா.? இல்ல சாகனுமா  என்ற பாடலையும் பாடி காட்டியுள்ளார்.

இலங்கையில் வரலாறு காணாத அளவிற்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மிகக் கடுமையான பசி பஞ்சம் பட்டினி அங்கு தலைவிரித்தாடுகிறது. அந்நாட்டை ஆளும் ராஜபக்சே குடும்பத்தினர் கூண்டோடு ராஜினாமா செய்ய வேண்டுமென மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். கையில் பணம் இருந்தாலும் பொருட்களை வாங்குவதற்கு கடைகளில் பொருட்கள் இல்லை, பொருட்கள் இருந்தாலும் வாங்குவதற்கு மக்களிடம் பணம் இல்லை என்ற அவள நிலை அங்கு இருந்து வருகிறது. ஒட்டுமொத்த நாடும் திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு பசிக் கொடுமை தாங்க முடியாமல் கள்ளத்தோணி  மூலம் இலங்கையிலிருந்து தமிழர்கள் தமிழ்நாட்டில் தஞ்சமடையும்  நிலை இருந்து வருகிறது.

இந்நிலையில் திரைப்பட நடிகர், இயக்குனர் டி.ராஜேந்தர் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் முள்ளிவாய்க்கால் பிரச்சினைக்காக கருணாநிதி கொடுத்த சிறுசேமிப்புத் திட்டத்திற்காக வழங்கிய பதவியை நான் ராஜினாமா செய்தேன். இன்று அங்கு பால், கேஸ், பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதை மக்கள் வாங்க முடியாத நிலை உள்ளது என அழுது கொண்டே பேசினார். 2009 மே 17 அன்று 40,000 தமிழர்கள் குண்டு போட்டு கொல்லப்பட்டனர் அந்தக் கொடூரன் ராஜபக்சேவின் கூட்டம் அன்று அந்த கொடூரத்தை செய்தது. இன்று அந்த நிலைமை என்ன ஆயிற்று, தமிழர்களுக்கு அவர்கள் செய்த பாவத்துக்கு தண்டனைதான் இது. அதனால்தான் இப்போதே இந்த அளவுக்கு பஞ்சம் நிலவுகிறது.

தமிழகத்தில் அன்று யாரும் குரல் கொடுக்கவில்லை, கலைஞர் கொடுத்து பதவியை ஈழத்தமிழர்களுக்காக தூக்கி எறிந்தவன் நான், நான் ஆன்மீகவாதியா அரசியல்வாதியா?  தற்போது அரசியலில் உள்ளவர்கள் தமிழ் தமிழ் என்று சொல்பவர்கள் இலங்கைத் தமிழர்களுக்கு என்ன செய்தார்கள். எது எப்படியோ இந்தியாவிற்கு இலங்கையில் நிலைமை வந்துவிடக்கூடாது என்று மத்திய அரசுக்கு நான் கோரிக்கை வைக்க இருக்கிறேன். கருணாநிதி இறந்த போது முதல்வராக இல்லாமல் முன்னாள் முதலமைச்சராகத்தான் இறந்தார். அப்படி தான் அவரை மெரினா கடற்கரையில் உள்ள நினைவிடத்தில் அடக்கம் செய்தனர். அவர் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்ததால்தான் அவருக்கு அந்த நிலைமை ஏற்பட்டது. இலங்கையின் நிலைமை இந்தியாவிற்கு வந்து விடக்கூடாது என எல்லாம் வல்ல சிவபெருமானை அல்லாஹ்வை, அல்லேலூயாவை கையெடுத்து வணங்கி வேண்டிக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழகம் அயோத்தியாக மாற வேண்டும் என்பதே பாஜக விருப்பம்..! இயக்குநர் பா.ரஞ்சித் குற்றச்சாட்டு!
பாகிஸ்தான் பிரதமர் பதவிக்கு மேலே பவருக்கு வந்த அசிம் முனீர்..! டம்மியாக்கப்பட்ட ஷாபாஸ் ஹெரீப்..!