சென்னை விமான நிலையத்தில் கிடுக்குப் பிடி.. இன்று முதல் விமான பயணிகளுக்கு இபாஸ்..

By Ezhilarasan BabuFirst Published Apr 10, 2021, 12:39 PM IST
Highlights

இதனால் சென்னை உள்நாட்டு விமானநிலைத்தில் வெளிமாநில பயணிகள் கடந்த 3 மாதங்களுக்கு மேல் இபாஸ் இல்லாமலே பயணித்து வந்த நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கொரோனா இரணடாவது அலை தமிழகம் முழுவதும் வேகமாக அதிகரித்து வருகிறது. 

சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் இபாஸ் முறை இன்று காலை முதல் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. ன்னை விமானநிலையத்தில் பன்னாட்டு  முணையத்தில் ஏற்கனவே இபாஸ் அமுலில் உள்ளது. ஆனால் உள்நாட்டு முனையத்தில் வெளி மாநிலங்களிலிருந்து வரும் உள்நாட்டு விமான பயணிகளுக்கு இபாஸ் பெயரளவில் மட்டுமே அமுல்படுத்தப்பட்டது.  இபாஸ்சை வெளிமாநில பயணிகளிடம் யாரும் பரிசோதிக்க வில்லை. எனவே வெளிமாநில பயணிகள் பலா் இபாஸ் இல்லாமல் பயணம் செய்துவந்த நிலையில் விமானநிலைய அதிகாரிகள் தரப்பில், இபாஸ்களை மாநில வருவாய் துறையினா் தான் சோதனை நடத்த வேண்டும். ஆனால் அவா்கள் தோ்தல் பணியில் தீவிரமாக இருக்கின்றனா் என்று கூறிவிட்டனா். 

இதனால் சென்னை உள்நாட்டு விமானநிலைத்தில் வெளிமாநில பயணிகள் கடந்த 3 மாதங்களுக்கு மேல் இபாஸ் இல்லாமலே பயணித்து வந்த நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கொரோனா இரணடாவது அலை தமிழகம் முழுவதும் வேகமாக அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்களில் மிகஅதிக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பரவிவருகிறது. இதையடுத்து தமிழக அரசு இன்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் முக்கியமாக சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் இபாஸ் முறை கண்டிப்பாக அமுல்படுத்தப்படும் என்று கூறியுள்ளது. 

இதையடுத்து சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் இன்று காலை 9 மணியிலிருந்து இபாஸ் முறை மீண்டும் அமுலுக்கு வந்துள்ளது. அதே நேரத்தில் கா்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி மாநிலங்களிலிருந்து வரும் பயணிகளுக்கு மட்டும் இபாஸ்சிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட வருவாய்துறையினா் சென்னை உள்நாட்டு விமானநிலையத்தின் வருகை பகுதியில் சிறப்பு கவுண்டா்கள் அமைத்து வெளிமாநில பயணிகளுக்கு இபாஸ்கள் வழங்கி வருகின்றனா். பல பயணிகள் ஆன்லைன் மூலம் செல்போன்களில் இபாஸ்களை பதிவிறக்கம் செய்து, அந்த பாஸ்களை காட்டிவிட்டு வெளியே செல்கின்றனா். 

இபாஸ் இல்லாமல் வெளிமாநில  பயணியையும் வெளியே செல்ல அனுமதிப்பதில்லை. அதே நேரத்தில் தமிழ்நாட்டிற்குள் திருச்சி, கோவை, மதுரை, தூத்துக்குடி, சேலம் ஆகிய விமான பயணிகளுக்கு இபாஸ்கள் தேவையில்லை. ஆனால் அவா்களுக்கு  தொ்மல் ஸ்கனா் மூலம் உடல் வெப்பநிலை மட்டும் பரிசோதிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து, அரசிடமிருந்து மறுஉத்தரவு வரும் இந்த இபாஸ் முறை கண்டிப்பாக அமுல்படுத்தப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனா். 

 

click me!