ரெய்டு..! ரெய்டு..! முன்னாள் மாஜிகளின் கிரிப்ரோ கரன்சி முதலீடு.. சோதனை முதல் பறிமுதல் வரை முழு விவரம்..

By Thanalakshmi VFirst Published Mar 15, 2022, 8:58 PM IST
Highlights

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சொந்தமான இடங்களில் இரண்டாவது முறையாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் சுமார் ரூ.34 லட்சம் ரொக்கத்தை கிரிப்டோவில் முதலீடு செய்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் கணக்கில் வராத 11 கிலோ தங்கம், 118 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் எஸ்.பி. வேலுமணி உள்துறை அமைச்சராக இருந்தார். இந்நிலையில் இவருக்கு சொந்தமான 60 க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் சென்னை மற்றும் கோவை மாநகராட்சி பணிகளுக்கு விடப்பட்ட டெண்டர்கள் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றிருந்ததாக கூறப்பட்டிருந்தது. 

மீண்டும் வழக்கால் சிக்கிய மாஜி:

இந்நிலையில் இன்று காலை முதல் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இரண்டாவது முறையாக சோதனை மேற்கொண்டனர். தற்போது தொடரப்பட்ட வழக்கில் வேலுமணி 2016 முதல் 2021 வரையிலான கால கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 58 கோடியே 23 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் பதிவு செய்திருக்கும் வழக்கில் , எஸ்.பி வேலுமணி உள்ளிட்டோர் வருமானத்தை விட 3,928%  கூடுதலாக சொத்து சேர்த்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: எஸ் பி வேலுமணி வீட்டில் சோதனை...! தொண்டர்களுக்கு சுடச்சுட காபி.. மதிய உணவு ரெடி..?

இந்நிலையில் சோதனை நிறைவடைந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2016 - 2021 வரையிலான காலக்கட்டத்தில் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது, 12 நபர்களின் துணையுடன் கூட்டு சதி புரிந்து வருமானத்திற்கு அதிகமாக 58.23 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில், சோதனை மேற்கொள்ளப்பட்டது.மேலும் கோவை லஞ்ச ஒழிப்புத்துறையினர் அன்பரசன், ஹேமலதா,சந்திர சேகர், சந்திர பிரகாஷ், கிருஷ்ணவேணி, சுந்தரி, கார்த்திக், விஷ்ணுவரதன், சரவணக்குமார், ஸ்ரீ மகா கணபதி ஜுவல்லர்ஸ்,கான்ஸ்ட்ராமால் குட்ஸ் பிரைவேட் லிமிடேட் மற்றும் ஆலம் கோல்டு மற்றூம் டயமண்ட்ஸ் பிரைவேட் லிமிடேட் மீதும் குற்ற வழக்கு  பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: SP Velumani: அப்படா.. இவ்வளவு கோடி சொத்து குவிப்பா? அடுத்தடுத்த வழக்கால் வசமாக சிக்கும் எஸ்.பி.வேலுமணி.!

59 இடங்களில் ரெய்டு:

இன்று வழக்கு தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினரால் 59 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் கோவை - 42, திருப்பூர்- 2, சேலம் - 4, நாமக்கல்- 1, கிருஷ்ணகிரி -1, திருப்பத்தூர் - 1, சென்னை - 7, மற்றும் கேரள மாநிலம் ஆனைக்கட்டி 1 ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கிரிப்டோ கரன்சி முதலீடு:

சோதனையில் 11.153 கிலோ தங்க நகைகள், 118.506 கிலோ வெள்ளி பொருட்கள், கணக்கில் வராத ரூ. 84 லட்சம் ரொக்கம், கைப்பேசிகள், வங்கி லாக்கர் சாவிகள், மடி கணினி, ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் சுமார் ரூ. 34 லட்சம் அளவுக்கு பலதரப்பட்ட கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: SP Velumani : வருமானத்தை விட 3,928% மடங்கு அதிகமாக சொத்து குவிப்பு.. எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப் பதிவு !!

click me!