ஏலகிரியில் இருந்து இறங்கி வந்த துரைமுருகன்... போராட்டத்தில் பங்கேற்பு..!

By Thiraviaraj RMFirst Published Jul 21, 2020, 11:56 AM IST
Highlights

திமுக பொருளாளர் துரைமுருகன் மின்சாரக் கட்டணம் தொடர்பான போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக 90 நாட்களுக்கு பிறகு ஏலகிரி மலையில் இருந்து இறங்கி வந்த தகவல் வெளியாகி இருக்கிறது.
 

திமுக பொருளாளர் துரைமுருகன் மின்சாரக் கட்டணம் தொடர்பான போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக 90 நாட்களுக்கு பிறகு ஏலகிரி மலையில் இருந்து இறங்கி வந்த தகவல் வெளியாகி இருக்கிறது.

கொரோனா தொற்று உருவானது முதல் துரைமுருகன் தனது காட்பாடி இல்லத்தில் தங்குவதில்லை. சென்னை கோட்டூர் புரத்தில் உள்ள அவரது வீட்டிலும் வசிக்கவில்லை.  காட்பாடியில் இருந்து 90 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஏலகிரி மலையில் நிலாவூர் பகுதியில் அவர் கட்டியுள்ள பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். ஆஞ்சியோ செய்யப்பட்டு, உடல் நலக் கோளாறால் கடந்த சில மாதங்களுக்கு முன் அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர். 80 வயதை கடந்தவர் என்பதால் அவரும், அவரது குடும்பத்தாரும் மிகுந்த எச்சரிக்கையுடன் கொரோனா பாதிக்காத வகையில் வசித்து வருகின்றனர்.  ஏலகிரி மலையில் உள்ள அவரது பண்ணை வீடு சொகுசு இல்லமாக கட்டப்பட்டது. 50 ஏக்கர் பரப்பளவில் உள்ள அந்த இடம் ஒவ்வொரு ஏக்கரும் 1 கோடி ரூபாய் மதிப்புள்ளது.  2 போர்வெல் போட்டு தோட்டம் அமைத்துள்ளார் துரைமுருகன்.

அந்தத் தோட்டத்தில் துரைமுருகன் மனைவி, உதவியாளர், சமையல்காரர்களை தவிர அவர் யாரையும் அனுமதிப்பது இல்லை. புத்தகங்கள் படிப்பது, இசை கேட்பது என்று நாட்களை கடத்தி வருகிறார் துரைமுருகன். ஏலகிரி மலையில் உள்ள பண்ணை வீட்டில் தான் ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் துரைமுருகனை சென்று பார்த்தார். அவரை சந்தித்த இரண்டே நாட்களில் வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்தத் தகவல் துரைமுருகனை உலுக்கியெடுத்து விட்டது.

உடல்நலம் சரியில்லாதவர், முதுமையானவர் என்பதால் துரைமுருகனை மு.க.ஸ்டாலின் அழைத்து அடிக்கடி நலம் விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஜெ.அன்பழகன் மறைவுக்குப் பின் துரைமுருகனிடம் நேரடியாகவே தினந்தோறும் அல்லது இரு நாளைக்கு ஒருமுறை என அலைபேசியில் அடிக்கடி பேசி நலம் விசாரித்து வருகிறார் மு.க.ஸ்டாலின். இந்த நிலையில் தான் மின்சாரக்கட்டணத்தை எதிர்த்து போராட்டத்தில் கலந்து கொள்ள காட்பாடி வந்தார் துரைமுருகன். போராட்டத்தை முடித்துக் கொண்ட உடனேயே ஏலகிரிக்கு மலையேறி விடுவார் என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

click me!