பொதுக்குழு மேடையிலேயே பொருளாளர் பணியை தொடங்கிய துரைமுருகன்!! தயாநிதி மாறனிடம் கலெக்‌ஷனை போட்டார்

By karthikeyan VFirst Published Aug 28, 2018, 2:04 PM IST
Highlights

பொதுக்குழு மேடையிலேயே பொருளாளர் பணியை தொடங்கிய துரைமுருகன், முதல் கலெக்‌ஷனாக தயாநிதி மாறனிடம் நிதி திரட்டும் பணியை தனக்கே உரிய பாணியில் செவ்வனே செய்தார். 
 

பொதுக்குழு மேடையிலேயே பொருளாளர் பணியை தொடங்கிய துரைமுருகன், முதல் கலெக்‌ஷனாக தயாநிதி மாறனிடம் நிதி திரட்டும் பணியை தனக்கே உரிய பாணியில் செவ்வனே செய்தார். 

திமுகவின் தலைவராக ஸ்டாலினும் பொருளாளராக துரைமுருகனும் அதிகாரப்பூர்வமாக திமுக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டனர். திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள கலைஞர் அரங்கத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பொதுக்குழுவில், திமுகவின் தலைவராக ஸ்டாலினும் பொருளாளராக துரைமுருகனும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டனர். 

அதன்பிறகு பேசிய துரைமுருகன், திமுகவின் முப்பெரும் பதவிகளான தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளில் பொருளாளர் பதவியை ஏற்பது குறித்து நெகிழ்ந்தார் துரைமுருகன். எம்ஜிஆர், பேராசிரியர் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, ஸ்டாலின் ஆகியோர் வகித்த பொருளாளர் பதவியை ஏற்பதற்கு மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் தெரிவித்தார்.

பொருளாளராக அறிவிக்கப்பட்ட பொதுக்குழு கூட்ட மேடையிலேயே பொருளாளர் பணியையும் தொடங்கிவிட்டார் துரைமுருகன். பொருளாளர் பதவி என்பதே கட்சிக்காக பணத்தை கலெக்‌ஷன் பண்ணுவதுதான். கட்சியின் பொதுக்குழுவில் இருப்பவர்களில் பணம் இல்லாதவர்கள் தான் அதிகம். பணம் நிறைய வைத்திருப்பவர்கள் மிகக்குறைவு. பணம் இருப்பவர்களில் முதலிடம் வகிப்பவர் தயாநிதி மாறன். எனவே அவரிடம் மடியேந்தி வருகிறேன். எவ்வளவு கொடுக்க முடியுமோ, கொடுங்கள். நிறைய தருவார் என நம்புகிறேன் என்று கூறி உரையை முடித்தார். 

துரைமுருகன் தனக்கே உரிய பாணியில் கலெக்‌ஷனை தொடங்க, அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது. 
 

click me!