அரைக்கால் சட்டை போட்டிருந்த குட்டி பையன் ஸ்டாலின்!! பொதுக்குழு மேடையில் நெகிழ்ந்த துரைமுருகன்

By karthikeyan VFirst Published Aug 28, 2018, 1:26 PM IST
Highlights

அரைக்கால் சட்டை அணிந்து குட்டி பையனாக ஸ்டாலினை முதலில் பார்த்தேன்; படிப்படியாக வளர்ந்து இன்று திமுகவின் தலைவராகியிருக்கிறார் ஸ்டாலின் என்று கூறி நெகிழ்ந்தார் துரைமுருகன்.
 

அரைக்கால் சட்டை அணிந்து குட்டி பையனாக ஸ்டாலினை முதலில் பார்த்தேன்;படிப்படியாக வளர்ந்து இன்று திமுகவின் தலைவராகியிருக்கிறார் ஸ்டாலின் என்று கூறி நெகிழ்ந்தார் துரைமுருகன்.

திமுகவின் தலைவராக ஸ்டாலினும் பொருளாளராக துரைமுருகனும் அதிகாரப்பூர்வமாக திமுக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டனர். திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள கலைஞர் அரங்கத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுவருகிறது. 

பொதுக்குழுவில், திமுகவின் தலைவராக ஸ்டாலினை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் பொதுச்செயலாளர் அன்பழகன். அதேபோல கட்சியின் புதிய பொருளாளராக துரைமுருகன் அறிவிக்கப்பட்டார். அதன்பிறகு கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் ஸ்டாலினுக்கு புகழாரம் சூட்டினர். 

அப்போது பேசிய துரைமுருகன், ஸ்டாலின் குறித்து நெகிழ்ந்து பேசினார். ஸ்டாலினை தம்பி என்று அழைத்து கொண்டிருந்தேன். இப்போது தலைவர் என்று அழைக்கிறேன். ஸ்டாலினை தலைவர் என்று அழைப்பதற்கு இவ்வளவு நாள் நான் வாழ்ந்ததே போதும். 1962ல் உங்களது வீட்டிற்கு முதன்முதலில் நான் வந்தபோது அரைக்கால் சட்டை அணிந்திருந்த குட்டி பையனாக ஸ்டாலினை முதலில் பார்த்தேன். எங்களை பார்த்ததும் உள்ளே ஓடிவிடுவார். அப்படி பார்த்த ஸ்டாலின், பிறகு வளர்ந்து, தோழனாகி, இன்று கட்சியின் தலைவராகியுள்ளார் என்று கூறி நெகிழ்ந்தார் துரைமுருகன். 

திமுகவின் முப்பெரும் பதவிகளான தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளில் பொருளாளர் பதவியை ஏற்பது குறித்து நெகிழ்ந்தார் துரைமுருகன். எம்ஜிஆர், பேராசிரியர் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, ஸ்டாலின் ஆகியோர் வகித்த பொருளாளர் பதவியை ஏற்பதற்கு மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் தெரிவித்தார்.
 

click me!